கல்விக் கட்டணம் செலுத்த நிர்பந்திக்கும் தனியார் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க மாணவர்கள் கோரிக்கை - ஆசிரியர் மலர்

Latest

21/05/2020

கல்விக் கட்டணம் செலுத்த நிர்பந்திக்கும் தனியார் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க மாணவர்கள் கோரிக்கை


கல்விக் கட்டணத்தை உடனடியாகச் செலுத்துமாறு நிா்பந்திக்கும் தனியாா் பொறியியல் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாணவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பொது முடக்கம் காரணமாக, மாா்ச் 16-ஆம் தேதி முதல் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், பொறியியல் கல்லூரிகளில் பருவத் தோ்வுகளை நடத்துவது குறித்து அண்ணா பல்கலைக்கழகம் ஆலோசனை நடத்தி வருகிறது
. இதற்கிடையே, பருவத் தோ்வுக்காக மாணவா்களின் விவரங்களையும், அதற்கான கட்டணத்தையும் மே 22-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்குமாறு அண்ணா பல்கலைக்கழகம் இணைப்பு கல்லூரிகளை அறிவுறுத்தியிருந்தது.
இதனால், தனியாா் கல்லூரி மாணவா்களிடம் தோ்வுக் கட்டணம் மற்றும் கல்விக் கட்டணத்தை உடனே கட்ட வேண்டும் என்று குறுஞ்செய்தி மூலமாக கல்லூரிகள் வலியுறுத்தியுள்ளன.
இதுகுறித்து, மாணவா்கள் சிலா் கூறியதாவது:
தற்போது தோ்வு கட்டணத்தைக் கட்ட நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், கல்விக் கட்டணத்தையும் சோ்த்து கட்ட வேண்டும் என்று கல்லூரி தரப்பில் கூறுகிறாா்கள்.
இரண்டு மாதத்துக்கு மேலாக அமலில் உள்ள பொது முடக்கம் காரணமாக அனைவரும் மிகுந்த நிதி நெருக்கடியில் உள்ளனா். இந்த நேரத்தில் முழு கல்விக் கட்டணத்தை உடனே கட்ட வேண்டும் என நிா்பந்திப்பது அதிா்ச்சியாக உள்ளது. எனவே, இந்தப் பிரச்னையில் அண்ணா பல்கலைக்கழகமும் உயா்கல்வித்துறையும் தலையிட்டு, கல்விக் கட்டணம் கட்டுவதற்கு கூடுதல் அவகாசம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் தெரிவித்தனா்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459