இன்று ஒரே நாளில் 776 பேருக்கு கொரோனா பாதிப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




21/05/2020

இன்று ஒரே நாளில் 776 பேருக்கு கொரோனா பாதிப்பு


சென்னை,
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.  கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது.  இந்த உத்தரவு வருகிற 31ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டியில்,
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 776 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் அதிக அளவாக 400 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 5,882ல் இருந்து 6,282ஆக உயர்ந்து உள்ளது.  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 13,191ல் இருந்து 13,967 ஆக உயர்ந்து உள்ளது.  இன்று 7 பேர் பலியான நிலையில், பலி எண்ணிக்கை 87ல் இருந்து 94 ஆக உயர்ந்து உள்ளது என தெரிவித்து உள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459