வெட்டுக்கிளிகள் ஏன் இப்படி செயல்படுகின்றன ? தடுக்க முடியுமா?.. - ஆசிரியர் மலர்

Latest

28/05/2020

வெட்டுக்கிளிகள் ஏன் இப்படி செயல்படுகின்றன ? தடுக்க முடியுமா?..


Invasion of locusts
They claim that Locustat can wreak havoc on one-fifth of the world's total area. 
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் இறப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டிருப்பது ஒருபுறம்… இன்னொருபுறம் லடாக் எல்லையில் இந்திய மற்றும் சீன ராணுவத்துக்கு இடையே பதற்றமான ஒரு சூழல் நிலவுகிறது. இப்படியான பிரச்னைகளுக்கு நடுவில் இந்தியாவின் வடமேற்கு மாநிலங்கள் வெட்டுக்கிளி படையெடுப்பால் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்த வெட்டுக்கிளிகளின் வாழ்க்கைமுறை என்ன? அவை அழிவை ஏற்படுத்தக் காரணம் என்ன?
`பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பைச் சேர்ந்த ஜியோ டாமினிடம் பேசினோம்.

ஜியோ டாம்

ஜியோ டாம்

எந்த வகையான வெட்டுக்கிளிகள் ஆபத்தானவை?

சாதாரணமாக நாம் பார்க்கக்கூடிய வெட்டுக்கிளிகளை கிராஸ் ஹாப்பர் (Grass hopper) என்று சொல்கிறோம். ஆனால், இத்தகைய பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வெட்டுக்கிளிகள், லோகஸ்ட் (Locust) என்ற பெயரால் அழைக்கப்படுகின்றன.
இவையும் வெட்டுக்கிளியின் ஒரு வகையே. வெட்டுக்கிளிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வகைகள் இருந்தாலும் இந்த லோகஸ்டில் மட்டும் 22 வகைகள் உள்ளன. அதில் ஒன்றுதான் பாலைவன வெட்டுக்கிளி. அதுதான் தற்பொழுது பாதிப்புக்குக் காரணமாக உள்ளது. லோகஸ்ட் வகை வெட்டுக்கிளிகள் மட்டுமே இவ்வாறு படையெடுக்கக் கூடியதாக உள்ளன. லோகஸ்ட் வகை வெட்டுக்கிளிகளினால் ஏற்படும் அழிவுகள் எவ்வாறு இருக்கும்? லோகஸ்ட் வகை வெட்டுக்கிளிகளின் கண்களில் படும் பச்சை அனைத்துமே அழிவைச் சந்திக்கும். இவற்றின் உணவுத் தேவை அதிகம். அதனால்தான் இது விவசாயத்திற்கு மிகவும் அச்சுறுத்தலான ஓர் உயிரினமாக இருக்கிறது. National Geographic கணிப்பில் உலகத்தின் மொத்த மக்கள்தொகையில் 10 சதவிகித மக்களைப் பட்டினியாக்கும் அளவிற்கு, இந்த வெட்டுக்கிளி இனத்தால் பாதிப்புகளை ஏற்படுத்தமுடியும் என்று கூறுகின்றனர். மேலும், உலகத்தின் மொத்த பரப்பில் ஐந்தில் ஒரு பங்கை ஆக்கிரமித்து லோகஸ்ட்டால் அழிவை ஏற்படுத்த முடியும் என்றும் கூறுகின்றனர். இதை வைத்து இந்தப் படையெடுப்பின் பிரச்னையையும், அழிவின் தாக்கத்தையும் நாம் உணர வேண்டும்.

வெட்டுக்கிளி

வெட்டுக்கிளி

இந்த வெட்டுக்கிளிகளின் வாழ்நாள் எவ்வளவு காலம்?

லோகஸ்ட் வெட்டுக்கிளிகளில் உள்ள 22 வகைகளில் வாழ்க்கைச் சுழற்சி வெவ்வேறு மாதிரியாக இருக்கும். ஒரு சில வாரங்கள் முதல் பல மாதங்கள் தொடர்ந்து வாழக்கூடிய வெட்டுக்கிளிகளும் உள்ளன. இவை 90 முதல் 120 என்ற எண்ணிக்கையில் முட்டையிடும். பாலைவன வெட்டுக்கிளிகளுக்கு இரண்டரை மாதம் முதல் ஐந்து மாதம் வரை வாழ்நாள் உள்ளதாகக் கூறப்படுகின்றது.

லோகஸ்ட் வகை வெட்டுக்கிளிகள் இவ்வாறு ஆபத்தான வகையில் செயல்படுவதற்கான காரணம் என்ன?

இதன் வாழ்க்கை நிலையை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம். ஒன்று அது தனித்தனியாக வாழக் கூடிய பருவம். இது எப்போது ஆக்ரோஷமான படையெடுப்பாக மாறும் என்றால், ஏதோ ஒரு வறட்சி காலத்தில் சேர்ந்து வாழும் சூழலுக்கு இவை தள்ளப்படுகின்றன. குறைந்த பசுமை உள்ள இடத்தில் பல வெட்டுக்கிளிகள் உணவுக்காக முட்டி மோதுவதால் அங்கு ஒரு போட்டியான சூழல் உருவாகின்றது. அவ்வேளையில் அதன் உடம்பில் செரோட்டனின் என்ற வேதிப்பொருள் சுரக்கின்றது. அது சுரக்கத் தொடங்கி 1 முதல் 2 மணி நேரங்களில் இதன் வாழ்க்கை முறை, நடவடிக்கைகளில் வேறுபாடு வருகிறது. அதற்கு அடுத்து வரும் தலைமுறை வெட்டுக்கிளிகள், தங்கள் பெற்றோரைப்போல் இல்லாமல், அங்கும் இங்கும் சென்று அழிவை ஏற்படுத்தும் வெட்டுக்கிளிகளாக மாறிவிடுகின்றன.
ஆனால், இதற்கு அடுத்த சந்ததியும் இதேபோல் ஆக்ரோஷமாக இருக்கும் என்று இல்லை.

வெட்டுக்கிளி

வெட்டுக்கிளி

இந்த பாதிப்பிலிருந்து முழுவதுமாக மீள்வதற்கு வழி உண்டா? முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் உள்ளனவா?


தற்பொழுது இந்தப் படையெடுப்பிலிருந்து விளைநிலங்களைக் காப்பாற்ற ட்ரோன் மூலமாகப் பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கப்படுகின்றது. ஆனாலும் இதன் ஆக்கிரமிப்பு பெருகிய வண்ணமே இருக்கிறது. ஒவ்வொரு பூச்சியாகத் தேடி அழிப்பது என்பது இயலாதது. அதனால் இந்த வெட்டுக்கிளிகளை முழுமையாகக் கட்டுப்படுத்துதல் என்பது முடியாத காரியம். இந்தப் படையெடுப்பைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று குறிப்பிட்டுச் சொல்ல எதுவும் இல்லை.

பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பதனால் ஏற்படும் பாதிப்புகள்?

பூச்சிக்கொல்லி மருந்துகள் குறைந்த செறிவில் (low concentration) பயன்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டிருந்தாலும் இதனால் விளைநிலங்களுக்குப் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்தப் பூச்சிக்கொல்லி மருந்துகள் கண்மண் தெரியாமல் ஆகாயத்திலிருந்து தெளிக்கப்படுவதால் நிலம், காற்று, மண் பாதிக்கப்படுவதுடன் விவசாயத்திற்குத் தேவையான நல்ல பூச்சிகளும் அழிக்கப்படுகின்றன
. வெட்டுக்கிளிகளை மட்டும் அழிக்க பிரத்யேகமான மருந்துகள் இல்லாததால் மற்ற உயிரினங்களான பறவையினங்களும், விலங்கினங்களும், விவசாயத்திற்கு நன்மை பயக்கும் பூச்சிகளும் இதனால் பாதிக்கப்படும்.

வெட்டுக்கிளி

வெட்டுக்கிளி
ANI

தமிழகத்திற்கு இந்த லோக்கஸ்ட் வகை வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதா?

இந்த உயிரினம் பசுமையான பரப்பு எங்கு எங்கு உள்ளதோ அங்கெல்லாம் அது பயணிக்கும். இந்த லோகஸ்ட் வெட்டுக்கிளிகள் தமிழ்நாட்டுக்கு வராது என்று கூற முடியாது, எதற்கும் தயாராக இருக்க வேண்டும்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459