அதி தீவிரப் புயலாக வலுப்பெற்றுள்ளது. : ஆம்பன் புயல்.20 ஆம் தேதி கரையை கடக்கும் - ஆசிரியர் மலர்

Latest

 




18/05/2020

அதி தீவிரப் புயலாக வலுப்பெற்றுள்ளது. : ஆம்பன் புயல்.20 ஆம் தேதி கரையை கடக்கும்


டெல்லி: தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆம்பன் புயல் அதி தீவிரப் புயலாக வலுப்பெற்றுள்ளது. சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கே ஏறக்குறைய 620 கி.மீ. தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது. வடக்கு வட மேற்கு திசையில் புயல் நகர்ந்து நாளை உச்ச உயர் தீவிர புயலாக வலுப்பெறும். புயல் வடகிழக்கு திசையில் நகர்ந்து மே 20-ம் தேதி வங்கதேசத்தில் கரையை கடக்கும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தென்வங்கக் கடலில் மத்திய பகுதியில் ஆம்பன் புயல் மையம் கொண்டிருக்கிறது.
ஒடிஷாவின் பாரதீப் துறைமுகத்தில் இருந்து 960 கி.மீ. தொலைவிலும் மேற்கு வங்கத்தின் டிகா துறைமுகத்தின் தெற்கு தென்மேற்கு பகுதியில் 1110 கி.மீ. தொலைவிலும் ஆம்பன் புயல் மையம் கொண்டிருந்தது.
வங்கதேசத்த்ன் கேபுபுரா துறைமுகத்தின் தெற்கு, தென்மேற்கு பகுதியில் 1230 கி.மீ. தொலைவில் இந்த ஆம்பன் புயல் நிலை கொண்டிருந்தது. இது அடுத்த 24 மணிநேரத்தில் மிக அதிதீவிர புயலாக வலுவடையும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிகை விடுத்துள்ளது.
அதிதீவிரமாக வலுவடையும் இந்த ஆம்பன் புயல் வடக்கு நோக்கி நகர்ந்து பின் வடக்கு- வடகிழக்கு திசையில் நகர்ந்து மேற்கு வங்கத்தின் டிகா- வங்கதேசத்தின் ஹாதியா தீவுகளுக்கு இடையே மே 20-ந் தேதி கரையை கடக்கும். இதனால் அடுத்த 24 மணிநேர்த்தில் அந்தமான் நிக்கோபர் தீவுகளுக்கு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும். இதனால் வங்க கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஒடிஷா, மேற்கு வங்கத்தில் 17 தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் உடனடி நிவாரணப் பணிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459