தெருக்களில் கிருமி நாசினி தெளிப்பதால் கொரோனா வைரசை அழிக்க முடியாது - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

Sunday, 17 May 2020

தெருக்களில் கிருமி நாசினி தெளிப்பதால் கொரோனா வைரசை அழிக்க முடியாது


ஜெனீவா: தெருக்களில் கிருமி நாசினி தெளிப்பதால் கொரோனா வைரசை அழிக்க முடியாது என்பதை உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக பொது இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. இந் நிலையில், உலக சுகாதார அமைப்பு ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
அதில் கூறி இருப்பதாவது: சாலைகள் போன்ற பொது இடங்களில் கிருமி நாசினி தெளிப்பதால் கொரோனா வைரஸ் அழிந்துவிடாது. அசுத்தமாக உள்ள இடத்தில் கிருமிநாசினியே செயலிழந்துவிடும்.
மேலும், திறந்தவெளியில் கிருமிநாசினி தெளிப்பதால் வேறு உடல்நலக் குறைபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம்
. குளோரின் மற்றும் பிற நச்சு ரசாயனங்கள் வீதிகளில் தெளிப்பதால், கண் எரிச்சல், சரும எரிச்சல் மற்றும் குடல் சார்ந்த பிரச்னைகள் உண்டாகக்கூடும்.
எந்தச் சூழலிலும் தனிநபர்கள் மீதும் கிருமிநாசினி தெளிப்பது பரிந்துரை செய்யப்படவில்லை. அதனால் உடல் ரீதியான பாதிப்பு மட்டுமின்றி மன ரீதியான பாதிப்பும் ஏற்படக்கூடும் என்று தெரிவித்துள்ளது