தொலைதூர கல்விக்கான மாணவர் சேர்க்கை அக்.13 வரை நீட்டிப்பு - இக்னோ அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




 


01/10/2026

தொலைதூர கல்விக்கான மாணவர் சேர்க்கை அக்.13 வரை நீட்டிப்பு - இக்னோ அறிவிப்பு

 1247264

தொலைதூரக் கல்வி 2026 ஜூலை பருவ மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதி அக்டோபர் 13 வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாக இக்னோ அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழக (இக்னோ) சென்னை மண்டல முதுநிலை இயக்குநர் ஜெ.எஸ்.டாரதி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், “மத்திய அரசு பல்கலைக்கழகமான இக்னோ, தொலைதூரக் கல்வி திட்டத்தின் கீழ் பல்வேறு பாடப் பிரிவுகளில் இளங்கலை, முதுகலை, டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளை வழங்கி வருகிறது.

தற்போது மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 2026 ஜூலை பருவ சேர்க்கைக்கான கடைசி தேதி அக்டோபர் 13-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, தொலைதூரக் கல்வி படிப்புகளில் சேர விரும்புவோர் https://ignouiop.samarth.edu.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி அக்டோபர் 13-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இக்னோ-வில் பி.ஏ, பி.காம், பி.எஸ்சி படிப்புகளில் சேரும் தகுதியுள்ள எஸ்.சி, எஸ்.டி வகுப்பினருக்கு கல்வி கட்டணத்தில் 50 சதவீத விலக்கு அளிக்கப்படுகிறது. மாணவர் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்கலை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.ignou.ac.in) அறிந்துகொள்ளலாம். மேலும் இக்னோ சென்னை மண்டல அலுவலகத்தை 044-2661 8040 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459