சரண்டர் தொடர்பான சந்தேகங்களும் தீர்வும் - ஆசிரியர் மலர்

Latest

 




 


18/09/2026

சரண்டர் தொடர்பான சந்தேகங்களும் தீர்வும்


SLS மீண்டும் நடைமுறைக்கு வந்து (1/10/25) ஓர் ஆண்டு நிறைவு பெற போகிறது...

இருப்பினும் சில சந்தேகங்கள் அடிப்படையில் 


SLS சார்ந்த பதிவு இது 


1) 8 September 2025 பணியில் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்கள் தற்போது surrender leave salary பெறலாமா?


ஆம் அவர்கள் 8/9/2026 க்கு பிறகு 15 நாட்கள் ஒப்புவிப்பு செய்யலாம்


2) தகுதி காண் பருவம் முடிந்த பிறகு தான் SLS என கூறுகிறார்கள்?


இல்லை அது தவறு

SLS - Tamil Nadu Leave rules 7A இல் சொல்லப்படுகிறது


முதல் வரியே

A probationer or an approved probationer என துவங்குகிறது


அதாவது தகுதி காண் பருவத்தில் உள்ளவர்கள், (தகுதி காண் பருவம் முடித்தவர்கள்)  SLS பெறலாம்


3) தகுதி காண் பருவத்தில் பாதி தான் EL credit ஆ?


ஆசிரியர்களுக்கு தகுதி காண் பருவத்தில் எந்த ஒரு தேர்வு/ சிறப்பு தகுதி பெற வேண்டும் என்ற நிபந்தனை கிடையாது.


அதனால் full EL credit ( அதாவது 17days / year)


இளநிலை உதவியாளர்கள் தகுதி காண் பருவம் நிறைவு செய்ய நிபந்தனைகள் உள்ளது...

அதனால் அவர்களுக்கு பாதி தான் EL வழங்கப்படும்

அதாவது தகுதி காண் பருவம் நிறைவு எனில்

30days/ year...

தகுதி காண் பருவத்தில் அதில் பாதி 15days / year... தான் EL credit...


ஆசிரியர்களுக்கு இந்த விதி இல்லை...


4) விடுப்பில் உள்ள போது SLS வழங்கலாமா?


ஆம் EOL/ loss of pay, UEL on PA ( Half pay leave) இதை தவிர வேறு எந்த ஒரு விடுப்பில் ( மகப்பேறு விடுப்பு உட்பட) இருந்தாலும் SLS வழங்கலாம்

TNLR 7A (i) பார்க்க இணைப்பு


5) 8/9/25 BT  நியமனம் அவர்கள் 1/7/26 இல் ( increment date) SLS செய்யலாமா?


அவர்கள் கணக்கில் EL இருந்தால் தாராளமாக செய்யலாம் ( அதாவது வேறு துறைகளில் பணி புரிந்து/ அல்லது வேறு பணியில் இருந்து இங்கு மாறி வந்து இருந்தால்) 

EL balance carry over ஆகி இருக்கும் அவர்கள் செய்யலாம்..


6) 8/9/25 புதிதாக நியமனம் ஆசிரியர்கள் எப்போது தான் ஒப்புவிப்பு இயலும்? குழப்பமாக உள்ளதே


ஆசிரியர்களுக்கு advance credit கிடையாது...

அதாவது ஓர் ஆண்டு பணி முடித்தால் தான் 17 நாள் கணக்கில் வரவு செய்யப்படும்...


எனவே 8/9/26 இல் தான் அவர்கள் கணக்கில் 17 நாள் வரவு.

அதில் 15 நாட்களை

8/9/26 அல்லது அதற்கு பிறகு ஏதேனும் ஒரு தேதியில் ஒப்புவிப்பு செய்யலாம் .


7) அரசுக் கடிதம் இல்

1/7 என உள்ளது நீங்க 8/9 அல்லது அதற்கு பிறகு என சொல்கிறீர்கள்?

முரணாக உள்ளதே?


தவறான புரிதல்...


அரசுக் கடிதத்தில் *eligible from* என தான் உள்ளது...

அதாவது 1/7 முதல் SLS செய்ய தகுதி


Eligible only on 

Must surrender on


என எதுவும் இல்லை 🤣

அரசுக் கடித்தத்தை/ விளக்கத்தை சற்று புரிந்து படித்தால் இந்த குழப்பம் வராது...


தங்களின் புரிதலுக்கு விரிவாக....


27.04.2020 SLS தடைக்கு முன் இரண்டே இரண்டு நிபந்தனைகள் தான்


1) ஓர் ஆண்டு இடைவெளியில் 15 நாட்கள்


2) இரண்டு ஆண்டு இடைவெளியில் 30 நாட்கள்

Surrender செய்யலாம்.


30/6/25 

GO 35 இல் SLS மீண்டும் நடைமுறை...

எல்லோரும் ஒரே நேரத்தில் SLS எனில் அரசிற்கு நிதி மேலாண்மை செய்ய சிரமம்...

அதுமட்டுமின்றி ஒவ்வொரு ஆண்டும் ஒரே நேரத்தில் அதிகப்படியான நிதி தேவை ஏற்படும்

இதை கருத்தில் கொண்டு தான் அரசாணை 35 இல் மூன்று நிபந்தனைகள்

1) ஆண்டிற்கு 15 நாட்கள் மட்டுமே

2) ஏற்கனவே இருந்த SLS date cycle...

3) 2020 க்கு பிறகு நியமனம் எனில் 

அவர்களின் ஆண்டு ஊதிய உயர்வு நாள் அன்று அதாவது 1/1, 1/4, 1/7 & 1/10


2020 க்கு முன் நியமனம் இதுவரை ஒரு முறை கூட SLS பெறவில்லை அவர்களுக்கு என்ன செய்ய? 

இந்த குழப்பத்திற்கு விடையாக 

அரசுக் கடிதம் 8.12.2025 இல் வெளியீடு

அதாவது முதல் முறையாக ஒப்புவிப்பு எனில் அவர்களின் வழக்கமான ஆண்டு ஊதிய உயர்வு நாள் முதல் SLS பெற தகுதி 🙏

இந்த அரசாணை/ அரசுக் கடிதத்தின் முக்கிய நோக்கம்

SLS ஐ வழங்காமல் இருக்க அல்ல

SLS நிதி மேலாண்மை... 

அதாவது 

Bulk Bill ஐ ஒழுங்கு படுத்த ஏற்படுத்தும் வழி 

உதாரணமாக 1/7 முதல் eligible எனில் அவர் அந்த தேதியில் ஒப்புவிப்பு செய்யலாம் அல்லது செய்யாமலும் இருக்கலாம்

அல்லது அதற்கு பிறகு ஏதேனும் ஒரு தேதியிலும் ஒப்புவிப்பு செய்யலாம் 🙏

இந்த முறை எந்த தேதியில் SLS , 

அடுத்த ஆண்டுகளில் அதே date SLS செய்து கொள்ளலாம்...

இந்த புரிதலுடன் பார்த்தல் அரசாணை அரசுக் கடிதத்தின் உண்மையான பொருள் விளங்கும் 👍

8) தகுதி காண் பருவத்தில் EL எடுத்தால் தகுதி காண் பருவம் தள்ளிப் போகும் என்கிறார்களே?

ஆம் EL ( விடுப்பு) எடுத்தால் தகுதி காண் பருவம் தள்ளிப் போகும்.

9) அப்ப SLS ஒப்புவிப்பு என்றாலும் தகுதி காண் பருவம் தள்ளிப் போகுமா?

🤣

இல்லை SLS ஒப்புவிப்பு செய்தால்..

தகுதி காண் பருவம் தள்ளிப் போகாது..

10) தகுதி காண் பருவத்தில் உள்ளவர்களுக்கு SLS ஒப்புவிப்பு செய்ய DEO/CEO order தேவையா?

தேவை இல்லை .

வழக்கமான நடைமுறை தான் தலைமை ஆசிரியரே IFHRMS kalanjium மூலம் பணம் பெற்று வழங்கலாம்...

TNLR 7A page, GO 35, LR 8.12.25 மூன்றையும் pdf ஆக இணைத்துள்ளேன் 

தகவலுக்காக

க.செல்வக்குமார்

தலைமை ஆசிரியர்

மதுரை மாவட்டம்

18/9/26

SLS  அரசாணைகள் pdf: CLICK HERE 


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459