புதிய ஆசிரியர்கள் நியமனத்தால் தற்காலிக ஆசிரியர்கள் நீக்கம்? - - ஆசிரியர் மலர்

Latest

 




 


16/02/2026

புதிய ஆசிரியர்கள் நியமனத்தால் தற்காலிக ஆசிரியர்கள் நீக்கம்? -


மாணவர்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்


தமிழகத்தில் அரசுப் பள்ளி னகளில் உள்ள காலி இடங்களில், பள்ளி மேலாண்மைக் குழு மூலம் நியமிக்கப்பட்ட தற்காலிக ஆசிரியர்கள் பணிபுரிந்து வரு கின்றனர். குறிப்பாக, பொதுத் தேர்வு நடைபெறும் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 வகுப் புகளுக்கு கூடுதல் முக்கியத்து வம் அளிக்கப்பட்டு, ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.


இந்நிலையில், டிஆர்பி மூலம் தேர்வு செய்யப்பட்ட முதுநிலை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் மற் றும் கணினி பயிற்றுநர்கள் என மொத்தம் 1,996 பேருக்கு முதல் வர் ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கி, அவர் கள் பணியில் சேர்ந்துள்ளனர்.


இதனால், 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு பாடம் எடுத்து வரும் தற்காலிக ஆசிரியர்கள் விடுவிக்கப்படும் நிலை உள் ளது. அடுத்த மாதம் பொதுத் தேர்வு நடைபெற உள்ள நிலையில், மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில், தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தேர்வு நேரத்தில்...


இதுகுறித்து பெற்றோர்கள் கூறியதாவது: தற்போது 1,996 ஆசிரியர்கள் நியமனம் செய் யப்பட்டுள்ளதால், இவர்கள் பணியில் சேர உள்ள இடங் களில் பணிபுரிந்த தற்காலிக ஆசிரியர்கள் விடுவிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. தேர்வு நேரத்தில் புதிய ஆசிரியர் கள் நியமனம் செய்யப்பட் டுள்ளதால், மாணவர்களுக்கு புரிதல் ஏற்படுவதில் சிக்கல் உண்டாகலாம். மேலும், கவனச் சிதறல் ஏற்படவும் வாய்ப்புள்ளது.



பழைய ஆசிரியர்கள் கொடுத்து வந்த வழிகாட்டுதல்களில் மாற்றம் ஏற்படும். முக்கிய வினாத்தாள்கள், பாடக் குறிப்புகளைப் பின்பற்றுவதில் சிரமம் ஏற்படும். இதனால், மதிப்பெண் குறையவும் வாய்ப்பு உள்ளது.


எனவே, தற்காலிக ஆசிரியர்களுக்கு நடப்பு கல்வியாண்டு முடியும்வரை பணி நீட்டிப்பு வழங்க வேண்டும். புதிய ஆசிரியர் நியமனத்தை சில மாதங்களுக்கு முன்னரோ அல்லது பொதுத்தேர்வுக்குப் பின்னரோ செய்திருக்கலாம். தேர்தலை மையப்படுத்தி தமிழக அரசு புதிய ஆசிரியர் நியமனத் தில் தீவிரம் காட்டியது தெரிகிறது. எனவே, புதிய ஆசிரியர் நியமனத்தால் மாணவர்கள் பாதிக்கப்படாத வகையில், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பெற்றோர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.


இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தரப்பில் கேட்டபோது, "பணி நியமனம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் பணிக்கு வந்ததும், அங்கு பணிபுரிந்த தற்காலிக ஆசிரியர்கள் நீக்கம் செய்யப்படுவது வழக்கம். தற்போதைய சூழல் குறித்து, அரசுதான முடிவெடுக்க வேண்டும்" என்றனர்


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459