தற்போது +2 படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் கவனத்திற்கு - ஆசிரியர் மலர்

Latest

 




 


17/02/2026

தற்போது +2 படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் கவனத்திற்கு


மார்ச் 2026 ல் +2 பொதுத் தேர்வு எழுதப் போகும்

குழந்தைகள்


ஆகஸ்டு 2026 ல் சிறந்த கல்லூரிகளில் இடம் பிடிக்க 


இன்னும் 10 - 20 நாள்களில் விண்ணப்பம் செய்ய வேண்டிய 4 விண்ணப்பங்கள் 👇


JEE 25.02.2026 க்குள்

NEET 8.03.2026 க்குள்

NCET 10.3.2026 க்குள்

NCHM25.3.2026 க்குள்

விண்ணப்பிக்க வேண்டும்.🛑


 *எதற்கு JEE ?* 

IIT NIT போன்ற சிறந்த கல்லூரிகளில் உள்ள சுமார் 60000 B.Tech இடங்களில் ஒரு இடத்தை பிடிக்க சுமார் 13 லட்சம் பேருடன் போட்டி போடும் தேர்வு.👍 Last Date 25.02.2026. Fees Rs.2000 / 1000


 **எதற்கு NEET ?*

தமிழ்நாட்டில் உள்ள சுமார் 11,300 (Govt. Seats only Around 5000) மருத்துவ இடங்கள் உள்பட நாடு முழுவதும் உள்ள சுமார் 1,12,000 (Govt. Seats only around 60,000)  மருத்துவ இடங்களை பிடிக்க சுமார் 21 லட்சம் பேருடன் போட்டி போடும் தேர்வு. தேர்வு எழுதும் 21 லட்சம் பேரில் Top 10,50,000 பேர் NEET தேர்ச்சி பெறுவார்கள். அவர்களில் 1,12,000 பேருக்கு மட்டுமே Seat கிடைக்கும். மீதமுள்ள NEET தேர்ச்சி பெற்ற சுமார் 9 லட்சம் பேரில் சுமார் 1 லட்சம் பேர் NEET - Repeater ஆக பயிற்சி எடுப்பார்கள். மீதம் 8 லட்சம் பேர் BE or BSc படிக்க செல்வார்கள். Last Date 08.03.2026 Fees 1600 / 1000


 *எதற்கு NCET ?*

+2 முடித்த உடன் 4 ஆண்டு B.Sc B.Ed/ BA BEd/ BCom BEd படித்து ஆசிரியர் பணிக்கு படிக்க விரும்பும் குழந்தைகளுக்கான தேர்வு. 17000 இடங்கள் உள்ளன. ஆனால் போட்டி மிக மிக குறைவு. ஆகவே அவசியம் விண்ணப்பிக்கவும். Last Date: 10.03.2026 Fees Rs.1000 / Rs. 650


 *எதற்கு NCHM?*

Star Hotels or கப்பல் or விமானம் or வெளிநாட்டு நட்சத்திர விடுதிகளில் ... Manager பணிக்கு செல்ல விரும்பும் குழந்தைகளுக்கு. Total seats சுமார் 7000. போட்டி மிக மிக குறைவு. Last Date: 25.03.2026. Fees Rs. 1000 / 450

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459