அரசு ஊழியர்கள் போராட்டம் தள்ளி போட முடிவு - ஆசிரியர் மலர்

Latest

 




 


05/03/2025

அரசு ஊழியர்கள் போராட்டம் தள்ளி போட முடிவு

 IMG-20250305-WA0001


தேர்வு நேரம் என்பதால், அமைச்சர்களின் கோரிக்கையை ஏற்று, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களின் போராட்டத்தை, ஜூன் மாதத்திற்கு தள்ளிப்போட திட்டமிட்டு உள்ளனர்.

பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், சமீபத்தில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அடுத்தக்கட்ட போராட்டத்தை, இம்மாதம் நடத்த திட்டமிட்டுள்ளனர். சட்டசபை கூட்டம் முடியும் வரை போராட்டத்தை தள்ளிப்போட வேண்டும் என, அவர்களிடம் அமைச்சர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில், போராட்டம் தொடர்பாக புதிய முடிவை, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்கள் எடுத்துள்ளன.

இதுகுறித்து, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர் ஒருவர் கூறியதாவது:
தேர்வு நேரம் என்பதால் போராட்டத்தை, ஜூன் மாதத்திற்கு தள்ளிப்போட திட்டமிடப்பட்டு உள்ளது. ஆனால், பிரச்னையை ஆறப் போடவில்லை. பேச்சு நடத்திய அமைச்சர்கள் குழு நான்கு வாரம் அவகாசம் கேட்டுள்ளது. அதன்பின், அவர்களை மீண்டும் சந்தித்து பேசுவோம்.

என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதை அறிந்து, அடுத்தக்கட்ட போராட்டம் நடத்தப்படும். தேர்வு நேரத்தில் போராட்டம் நடத்தினால், நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு ஆளாக நேரிடும் என்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459