வேலைவாய்ப்பு செய்திகள் 2024
1972ஆம் ஆண்டு கிராஜுவிட்டி சட்டத்தின்படி சுரங்கங்கள், தொழிற்சாலைகள், ரயில்வே மற்றும் அலுவலகங்கள் ஆகியவற்றில் பணிபுரிபவர்களுக்கு கிராஜுவிட்டி சட்டம் பொருந்தும். ஒரு அலுவலகத்தில் 10க்கும் மேற்பட்டவர்கள் இருந்தாலே அவர்கள் கிராஜுவிட்டி பெற தகுதியானவர்களாவர் எந்தெந்த நிறுவனங்கள் பணிக்கொடை சட்டத்தின் கீழ் வரும்?: ஒரு நிறுவனத்தின் 10க்கும் மேற்பட்டோர் 12 மாதங்களுக்கு மேல் பணிபுரிந்தாலே அவர்கள் கிராஜுவிட்டி சட்டத்தின் கீழ் வருவார்கள். இது, அரசு மற்றும் தனியார் நிறுவனம் ஆகிய இரண்டுக்கும் பொருந்தும் ஒரு பணியாளர் எவ்வாறு கிராஜுவிட்டி பெறுவது?: பணியாளர் கீழ்க்கண்ட முறைகளின் மூலம் கிராஜுவிட்டி பெற இயலும். 1. ராஜினாமா 2. பணி ஓய்வு 3. பணி நீக்கம் 4. மூப்போய்வு 5. இயலாமை 6. பணியாளரின் மரணம் (அவர்களது குடும்பத்திற்கு கிராஜுவிட்டி பணம் வழங்கப்படும்)கிராஜுவிட்டி சட்டத்தில் இருந்து நிறுவனங்கள் விலக்கு கேட்க முடியுமா?: முடியாது!
ஒருமுறை கிராஜுவிட்டி சட்டத்தின் அனைத்து தகுதிகளையும் ஒரு நிறுவனம் பூர்த்தி செய்தாலே அவர்கள் கிராஜுவிட்டி சட்டத்தின் கீழ் வந்து விடுவார்கள். அதன் பின்னர், அதிலிருந்து விலக்கு கேட்க முடியாது.
கிராஜுவிட்டி பெறுவதற்கு குறைந்தபட்ச தகுதி என்ன?
ஒரு பணியாளர் ஒரே நிறுவனத்தில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணி புரிந்தால் அவர் கிராஜுவிட்டி பெற தகுதியானவராவார். அதுபோலவே ஒரு பணியாளர் ஒரு நிறுவனத்தில் 6 மாதத்திற்கு மேல் பணிபுரிந்தால் கிராஜுவிட்டி சட்டத்தின்படி அவரது பணிக்காலம் ஒரு வருடம் என்றே கருதப்படும்.
பணிக்காலம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?:
1. ஒரு பணியாளர் 7 வருடங்கள் 1 மாதம் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்தால், அவர் ஒட்டு மொத்தமாக 7 வருடங்கள் பணிபுரிந்ததாக கணக்கில் கொள்ளப்படும்.
2. ஒரு பணியாளர் 8 வருடங்கள் 6 மாதங்கள் பணிபுரிந்ததாக கணக்கிட்டால், ஒட்டுமொத்தமாக 9 வருடங்கள் அவர் பணிபுரிந்ததாக கணக்கில் கொள்ளப்படும்
கிராஜுவிட்டி எவ்வாறு கணக்கிடப்படுகிறது? இரண்டு முக்கிய காரணிகளை வைத்து கிராஜுவிட்டி கணக்கிடப்படுகிறது. பணியாளரின் கடைசியாக பெறப்பட்ட அடிப்படை சம்பளம் மற்றும் பணியாளரின் ஒட்டுமொத்த பணிக்காலம்.
கிராஜுவிட்டி கணக்கிடும் சமன்பாடு:
கிராஜுவிட்டி (கடைசியாக பெறப்பட்ட அடிப்படை சம்பளம் * ஒட்டுமொத்த பணிக்காலம்*15) / 26 இதில் உள்ள 15 என்பது 15 நாட்கள் ஊதியத்தை குறிக்கிறது. 26 என்பது ஒரு மாதத்தில் உள்ள 26 நாட்கள் வேலை நாளை குறிக்கிறது. (ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக)
45 ஆயிரம் அடிப்படை சம்பளத்திற்கு கிராஜுவிட்டி கணக்கிடுவது எப்படி?:
45 ஆயிரம் ரூபாய் அடிப்படை சம்பளம் பெறும் ஒரு பணியாளர் 6 வருடங்கள் 6 மாதங்கள் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்ததாக கணக்கிட்டால், அவரது ஒட்டு மொத்த பணிக்காலம் 7
ஆண்டுகள் என கணக்கில் கொள்ளப்படும். அதன்படி கணக்கிட்டால் (45000*7*15) / 26 = ரூ.1,81,730 என்பது அவரது கிராஜுவிட்டி தொகை ஆகும்.
ஆண்டுகள் என கணக்கில் கொள்ளப்படும். அதன்படி கணக்கிட்டால் (45000*7*15) / 26 = ரூ.1,81,730 என்பது அவரது கிராஜுவிட்டி தொகை ஆகும்.
கிராஜுவிட்டி பற்றி அறிந்து கொள்வது ஏன் அவசியம்?:
உங்களது கிராஜுவிட்டியை பற்றி சரியாக கணக்கிட்டு வைத்திருப்பதன் மூலம், உங்களது எதிர்கால திட்டங்களை சரியாக வகுத்துக் கொள்ளலாம். கிராஜுவிட்டி பெறும் நேரத்தில் எழும் தேவையற்ற குழப்பத்தையும் தவிர்க்க முடியும்.
No comments:
Post a Comment