மாணவர்களுடன் மதிய உணவு சாப்பிட ஆசிரியர்களுக்கு உத்தரவு - ஆசிரியர் மலர்

Latest

 




 


21/09/2024

மாணவர்களுடன் மதிய உணவு சாப்பிட ஆசிரியர்களுக்கு உத்தரவு

 அரசு பள்ளி, உதவி பெறும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள், மாணவர் களுடன் அமர்ந்து மதிய உணவு சாப்பிட வேண்டும் என, பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.


வேலுார் மாவட்டம், காட்பாடி அருகேயுள்ள அரசு மகளிர் மேல் நிலை பள்ளியில், பிளஸ் 2 மாணவிக்கு வளை காப்பு நடத்துவது போல, வீடியோ ரீல்ஸ் பதிவு செய்து, சமூக ஊடகங் களில் பதிவிட்டனர். இது, சர்ச்சையானது.


இதுகுறித்து விசாரித்த முதன்மை கல்வி அலுவ லர் மணிமொழி, சம்பந் தப்பட்ட வகுப்பாசிரியர் சாமுண்டீஸ்வரியை, 'சஸ்பெண்ட்' செய்துள்ளார். பள்ளியின் தலைமை ஆசி ரியை அறிக்கை அளிக்க வும் உத்தரவிட்டுள்ளார்.


மேலும், அந்த மாவட்ட பள்ளிகளுக்கு சில கட் டுப்பாடுகளையும் விதித் துள்ளார்.


அதில், மாணவ, மாண வியர் மொபைல் போன் உள்ளிட்ட தடை செய் யப்பட்ட பொருட்களை பள்ளிக்கு எடுத்து வரு கின்றனரா என்பதை ஆசி ரியர்கள் சோதனை செய்து அறிய வேண்டும்.


மதிய உணவு இடைவே ளையில், ஆசிரியர்கள் தங் கள் அறையில் அமர்ந்தோ; வெளியில் சென்றோ சாப் பிடாமல், மாணவர்களு டன் அமர்ந்து சாப்பிட வேண்டும். ஒவ்வொரு பாட வேளையிலும், மாணவர் களின் வருகையை ஆசி ரியர்கள் கண்காணித்து, தலைமை ஆசிரியருக்கும், பெற்றோருக்கும் தகவல் அளிக்க வேண்டும். பள்ளி யில் விரும்பத்தகாத நிகழ் வுகள் நடந்தால்,


அந்த வகுப்பின் ஆசிரியரும், தலைமை ஆசிரியரும் பொறுப்பேற்க வேண்டும் என, உத்தரவிட்டுள்ளார்.


புதிய வழிகாட்டி நெறிமுறைகளை வகுத்து, அனைத்து பள் ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பும் வரை, இந்த கட்டுப்பாடுகளை கடை பிடிக்கும்படி, பள்ளிக் கல்வி துறை அதிகாரிகள் உத்தரவு வாய்மொழி பிறப்பித்துள்ளனர். 


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459