அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப தூய்மை பணிக்கு நிதி வேண்டும் - ஆசிரியர் மலர்

Latest

 




21/09/2024

அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப தூய்மை பணிக்கு நிதி வேண்டும்

 அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப தூய்மை பணிக்கு நிதி வழங்க வேண்டும் என வலி யுறுத்தப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில்


துப்புரவு பணிகள் மேற் கொள்ள அரசு சார்பில் சம்பந்தப்பட்ட யூனியன் அலுவலகங்கள் மூலமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பள்ளிகளுக்கு வழங்கப்படு கிறது. மூன்று மாதத்திற்கு ஒரு முறை இந்த நிதி வங்கி கணக்கு மூலம் வரவு வைக் கப்படுகிறது. அரசு தொடக் கப் பள்ளிகளுக்கு ஒரு மாதத்திற்கு தூய்மை பணி யாளர்களுக்கு ஊதியமாக ரூ.ஆயிரம்,தூய்மைசெய்யும் பொருட்கள்


வாங்க ரூ.300 என மொத்தம் 300, நடுநிலைப்பள்ளிகளில் ஊதியம் ரூ.ஆயிரத்து 500, பொருட்கள் வாங்க ரூ.500 என மொத்தம் ரூ.2ஆயிரம், உயர்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.2ஆயிரத்து 250 உடன் ரூ.500 சேர்த்து ரூ.2ஆயிரத்து 750, மேல்நிலைப் பள்ளி களுக்கு ரூ.3ஆயிரத்துடன் ரூ.500 சேர்த்து ரூ.3ஆயிரத்து 500என ஒதுக்கீடு செய்யப் பட்டு வருகிறது. பள்ளிகள் நடக்கும் அனைத்து நாட்களும் தினந் பட்டுள்ளது.


தோறும் கழிவறைகளை சுத் தம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. ஆனால் தூய்மை பணியாளர்களுக்கு வழங் கப்படும் ஊதியம் மிகக் குறைவாக இருப்பதால் பெரும்பாலான பணி யாளர்கள் பள்ளிகளில் தூய்மை பணிக்கு வருவ தில்லை. இதனால் தலை மையாசிரியர்கள் கடும் அவ தியடைந்து வருகின்றனர். ஏராளமான பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் அவர்களுடைய ஊதியத் தில் இருந்து தூய்மை பணி யாளர்களுக்கு கூடுதல் ஊதி யம் வழங்கி வருகின்றனர்.


இவ்வாறு மாதந்தோ றும் செய்ய முடியாத நிலை உள்ளதால் தூய்மை பணிக் கான நிதியை கூடுதலாக ஒதுக்க வேண்டும் என வலி யுறுத்தியுள்ளனர். மேலும் 50மாணவர் படிக்கும் பள் ளிக்கும், 500மாணவர் படிக் கும் பள்ளிக்கும் ஒரே நிதி ஒதுக்கப்படுகிறது. இவ்வாறு இல்லாமல் மாணவர்கள் கூடுதலாக படிக்கும் பள்ளி களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது நூறு நாள் வேலை திட்டத்தில் ஒரு நாளைக்கு ரூ.300 ஊதிய மாக வழங்கப்படுகிறது. பள்ளிகள் ஆண்டிற்கு சராச ரியாக 200நாள், மாதத்திற்கு 20நாள் செயல்படுகிறது. நூறு நாள் வேலை திட்ட ஊதியத்தின்படி கணக்கிட் டால் தூய்மை பணியாளர்

TEACHERS NEWS
களுக்கு மாதம் ரூ.6 ஆயி ரம் ஊதியமும், தூய்மை பணிக்கான பொருட்கள் வாங்க ரூ.ஆயிரம் சேர்த்து மாதம் ரூ.7ஆயிரம் வழங்க வேண்டும். ஆனால் இதில் பாதியளவு கூட வழங்கப் படுவதில்லை. மாணவர் எண்ணிக்கையை கணக்கி டாமல் ஒட்டு மொத்தமாக தொடக்க, நடுநிலை,உயர் நிலை, மேல்நிலை என நிதி ஒதுக்கீடு செய்வதால் கூடு தல் மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில் பாதிப்பு ஏற்ப டுகிறது.


எனவே மாணவர் கள் எண்ணிக்கை அடிப்ப டையில் துப்புரவு பணிக்கு கூடுதல் நிதி ஒதுக்க நடவ டிக்கை எடுக்க வேண் வேண்டும் என்றனர்.



No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459