சிங்கம்புணரி அரசு பள்ளியில் முதன்மைக் கல்வி அலுவலரை கண்டித்து பெண் ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம் புணரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1,248 மாணவிகள், 42 பெண் ஆசிரியர்கள் உள்ளனர். இப்பள்ளிக்கு நேற்று காலை 8.50 மணிக்கு முதன்மைக் கல்வி அலுவலர் பாலுமுத்து ஆய்வுக்கு சென்றார். அப்போது ஆசிரியர்கள் சிலர் பள்ளிக்கு வரவில்லை.
அவர்கள் 9 மணி வரை பள்ளிக்கு வந்துள்ளனர். இதை யடுத்து அவர்களை வருகை பதிவேட்டில் கையெழுத்திட பாலுமுத்து அனுமதிக்கவில்லை. பாலுமுத்து சென்றதும் தொடர்ந்து பள்ளி நடந்தது. மாலையில் பள்ளி முடிந்ததும் ஆசிரியர்கள் அனைவரும் முதன்மைக் கல்வி அலுவலரை கண்டித்து உள்ளி ருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் கூறுகையில், 'பள்ளிக்கு காலை 9.10 மணி வரை வரலாம். அதற்கு முன்பே வந்து விட்டோம். ஆனால் வருகை பதி வேட்டில் கையெழுத்திட எங்களை அனுமதிக்கவில்லை. மேலும் மாணவிகள் முன்னிலையில் ஒருமையில் திட்டினார். இதனால் அவர் வருத்தம் தெரிவிக்கும் வரை போராட்டம் தொடரும்' என்று கூறினர். அவர்களிடம் மாவட்டக்கல்வி அலுவலர் வடிவேல் பேச்சுவார்த்தை நடத்தினார். எனினும்
போராட்டம் இரவு வரை தொடர்ந்தது. இதுகுறித்து முதன்மைக் கல்வி அலுவலர் பாலுமுத்து கூறுகையில், வருகை பதிவேட்டில் கையெழுத்திட அனுமதித்து விட் டேன்' என்றார்.
No comments:
Post a Comment