சிலம்ப போட்டிக்கான நிபந்தனைகள் நீக்கம் - ஆசிரியர் மலர்

Latest

 




13/09/2024

சிலம்ப போட்டிக்கான நிபந்தனைகள் நீக்கம்

திருச்சியில் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில், சிலம்ப போட்டியில் பங்கேற்க 40 கிலோ எடை கட்டாயம் என திடீர் நிபந்தனை விதிக்கப்பட்டது. இந்த திடீர் நிபந்தனை காரணமாக போட்டியில் பங்கேற்க முடியாமல் சிறார்கள் தவித்தனர். திடீர் நிபந்தனையால் விளையாட முடியாத சிறார்கள் கண்ணீர் விட்டு அழுதனர். இதைத்தொடர்ந்து அதிகாரிகளுடன் சிறார்களின் பயிற்சியாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பெற்றோரும் பயிற்சியாளர்களும் நிபந்தனைகளும் தளர்த்துமாறு அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் பெற்றோரும் பயிற்சியாளர்களும் நிபந்தனைகளை தளர்த்தகோரி போராடிய நிலையில், நிபந்தனைகள் தளர்த்தப்பட்டது. இதையடுத்து சிறார்கள் விளையாட அனுமதி அளிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459