முதுநிலை தொல்லியல் மற்றும்கல்வெட்டியல் பட்டயப் படிப்புகளுக்கு ஜூலை 10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தொல்லியல் துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பு விவரம்: தமிழ்நாடு தொல்லியல் மற்றும்அருங்காட்சியகவியல் நிறுவனத்தில் 2024-26-ம் கல்வியாண்டுக்கான இரண்டாண்டு கால முழுநேரமுதுநிலைப் பட்டயப் படிப்புக்கு மாணவர் சேர்க்கைப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தொல்லியல், கல்வெட்டியல், மரபு மேலாண்மை மற்றும் அருங்காட்சியகவியல் ஆகியவற்றில் முதுநிலைப் பட்டயப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. இவற்றில் தொல்லியலுக்கு 20, பிற இரு படிப்புகளுக்கு தலா 10 இடங்கள் உள்ளன.இந்த பட்டயப் படிப்புகளில் சேர முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
முதுநிலை பட்டயப் படிப்புகள் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய 2 மொழிகளில் கற்பிக்கப்படும். சேர்க்கை பெறும் ஒவ்வொரு மாணவருக்கும் மாதந்தோறும் ரூ.6 ஆயிரம் பயிலுதவித் தொகை வழங்கப்படும்.
இதற்கான எழுத்துத் தேர்வு சென்னை, விழுப்புரம், சேலம், திருச்சி, மதுரை ஆகிய மையங்களில் ஜூலை 21-ம் தேதி நடைபெறும்.தமிழ், இலக்கியம், வரலாறு, தொல்லியல், கல்வெட்டியல், கட்டிடக்கலை, சிற்பக்கலை, நாணயவியல், அருங்காட்சியகவியல், வரலாற்றுசின்னங்களை பாதுகாத்தல் ஆகியபாடங்களில் இருந்து 100 கொள்குறிவினாக்கள் இடம் பெறும்.
இந்த பட்டயப் படிப்புகளில் சேரவிரும்புவோர் தொல்லியல் துறையின் https www.tnarch.gov.in என்றவலைதளத்தில் சென்று விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தை கல்விச் சான்றிதழ்கள்
மற்றும் சாதிச்சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களுடன் இணைத்து ‘முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர், தொல்லியல் துறை, தமிழ் வளர்ச்சி வளாகம், தமிழ்ச் சாலை, எழும்பூர்,சென்னை -600 008’ என்ற முகவரிக்கு ஜூலை 10-க்குள் அனுப்பவேண்டும். மேலும் தகவல்களுக்கு044-2819 0023 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




No comments:
Post a Comment