அலட்சிய தலைமை ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள் மீது நடவடிக்கை - ஆசிரியர் மலர்

Latest

03/06/2024

அலட்சிய தலைமை ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள் மீது நடவடிக்கை

 


dpi

பள்ளி கட்டமைப்பு நிதியை முறையாகச் செலவிடாத தலைமை ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும் பணி துவங்கியுள்ளது.


அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் செலவுகளுக்காக, நடப்பு கல்வி ஆண்டில் 44,042 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதில், ஆசிரியர்கள், அலுவலர்களின் சம்பளம், பள்ளி பராமரிப்பு, உள்கட்டமைப்பு மேம்பாடு என, பலவற்றுக்கும் பிரித்து வழங்கப்படுகிறது.


இந்நிலையில், கடந்த கல்வி ஆண்டில், பள்ளிகளின் பராமரிப்பு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடுக்கு, மாவட்ட வாரியாக ஒதுக்கப்பட்ட நிதியில் எவ்வளவு செலவாகியுள்ளது என்ற விபரத்தை, பள்ளிக்கல்வித் துறை சேகரித்துள்ளது.


இதில், பல மாவட்டங்களில் அரசு ஒதுக்கீடு நிதியை செலவு செய்யாமல், பள்ளிகளின் உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பராமரிப்பில் தலைமை ஆசிரியர்களும், மாவட்ட கல்வி அதிகாரிகளும் அலட்சியமாக செயல்பட்டது தெரிய வந்துள்ளது.


இதையடுத்து, அரசு நிதியை செலவு செய்யாத தலைமை ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில், 100க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர்கள், 10க்கும் மேற்பட்ட கல்வி அதிகாரிகள் சிக்கியுள்ளதாக பள்ளிக்கல்வி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459