பொறியியல் மாணவர் சேர்க்கை: 2.31 லட்சம் பேர் விண்ணப்பம் - ஆசிரியர் மலர்

Latest

02/06/2024

பொறியியல் மாணவர் சேர்க்கை: 2.31 லட்சம் பேர் விண்ணப்பம்

1258082

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 6-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


இந்நிலையில், 27-வது நாளான நேற்று மாலை 6 மணி வரை 2 லட்சத்து 31 ஆயிரத்து 124 பேர் ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்துள்ளனர். அவர்களில் ஒரு லட்சத்து 82 ஆயிரத்து 127 பேர் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்திவிட்டனர்.


அவர்களில், ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 944 பேர் தேவையான சான்றிதழ்களையும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்துவிட்டதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் தெரிவித்துள்ளார்.


தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஏற்கெனவே அறிவித்தபடி, பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு கடைசி நாள் ஜூன் 6-ம் தேதி ஆகும்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459