மருத்துவக் காப்பீடு முறைகேடு: ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

05/05/2024

மருத்துவக் காப்பீடு முறைகேடு: ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

 அரசு ஊழியர்கள் - ஆசிரியர் களுக்கான புதிய மருத்துவக் காப் பீட்டுத் திட்டத்தில் காப்பீடு நிறு வனங்கள் செய்யும் முறைகேடு களை கண்டித்து மாநிலம் முழு வதும் இரண்டு கட்டப் போராட்டங் கள் நடத்த தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி முடிவு செய்துள்ளது.


தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசி ரியர் கூட்டணியின் மாநில செயற் குழு கூட்டம் மாநில தலைவர் மூ. மணிமேகலை தலைமையில் சென் னையில் சங்கத்தின் மாநில அலு வலகத்தில் நடைபெற்றது. அதில், இதுதொடர்பாக தீர்மானம் நிறை வேற்றப்பட்டு உள்ளது.


தமிழ்நாட்டில் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம்

TEACHERS NEWS
மாதந்தோறும் ஊதியத்தில் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத் திற்கு ரூ.300 வீதம் பிடித்தம் செய் யப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ மனைகளில் சிகிச்சை பெறும் ஆசி ரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு அரசாணையின்படி கட்டணமில்லா சிகிச்சை வழங்கப்பட வேண்டும்.


ஆனால், தமிழ்நாடு அரசிடமி ருந்து அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தும் ஒப்பந்தத்தை எடுத் துள்ள United India Insurance நிறுவனம் மற்றும் MD India, Medi Aust ஆகிய காப்பீட்டு நிறுவ னங்கள் அரசாணைப்படி சிகிச்சைக் கான முழு தொகையையும் அரசுஊழியர்களுக்கு வழங்காமல் மிகப்பெரிய மோசடியில் தொட ர்ந்து ஈடுபட்டு வருகின்றன. ஒட்டு மொத்த சிகிச்சைக்கான தொகை யில் 30 விழுக்காடு முதல் 40 விழுக் காடு வரை மட்டுமே தற்போதைய சூழலில் வழங்கி வருகின்றன. ஆனால் சிகிச்சை பெற்ற


ஆசிரி யர்கள், அரசு ஊழியர்கள் கடன் வாங்கி பல லட்சம் ரூபாய் சொந்தப் பணத்தை மருத்துவமனைகளுக்கு செலுத்தி வருகின்றனர்.


இத்திட்டத்தின் பலன் அரசா ணைப்படி ஊழியர்களுக்கு கிடைக் காத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், இத்திட்டம் என்ன நோக்கத்திற்காக கொண்டுவரப்பட்டதோ அந்த நோக்கம் காப்பீட்டு நிறுவனங்க ளால் முற்றிலுமாகச் சிதைக்கப்பட் டுள்ளது.எனவே, புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு கட்ட ணமில்லா சிகிச்சை வழங்க வலி யுறுத்தியும் , முறைகேடுகள் புரிந்து வரும் காப்பீட்டு நிறுவனங்கள் மீது தமிழ்நாடு அரசு உடனடியாக நட வடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஜூன் 13 அன்று முதற் கட்டமாக மாநி லம் முழுவதும் அனைத்து மாவட் டத் தலைநகரங்களிலும் மாவட்டக் கருவூல அலுவலகங்கள் முன்பு இரண்டாம் கட்டமாக சென்னையில் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவல கம் முன்பு ஜூலை 17 அன்று மாநில அளவில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்துள்ளோம் என்று சங்கத்தின் மாநில பொதுச்செயலா ளர் ச. மயில் தெரிவித்திருக்கிறார்.

Tnptf letter: CLICK HERE 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459