சட்டப்படிப்புக்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம் - ஆசிரியர் மலர்

Latest

05/05/2024

சட்டப்படிப்புக்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

 


1241926

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்பில் சேர மே 10-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு நாளை (மே 6) வெளியாகிறது. அதைத்தொடர்ந்து உயர்கல்வி மாணவர் சேர்க்கைக்கான பணிகள் தொடங்கப்படும் நிலையில், 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்பு மாணவர்சேர்க்கை தொடர்பான அறிவிப்பைதமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.


இதுதொடர்பாக, பல்கலைக்கழக பதிவாளர் கவுரி ரமேஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:


தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற அனைத்து சட்டக்கல்லூரிகளிலும், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சீர்மிகு சட்டப்பள்ளியிலும் 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்பு கற்பிக்கப்பட்டு வருகிறது.


அந்த வகையில் 2024-25-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கு மே 10 முதல் 31-ம் தேதி வரை www.tndalu.ac.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். 3 ஆண்டு சட்டப்படிப்பு மற்றும் முதுகலை சட்ட மேற்படிப்புகளுக்கான விண்ணப்ப தேதி பல்கலைக்கழக இணையதளத்தில் பின்னர் அறிவிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459