குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் : முதல்வர் - ஆசிரியர் மலர்

Latest

06/05/2024

குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் : முதல்வர்

 பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்று கல்லூரி வாழ்வுக்குச் செல்லும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகளை தேர்வுகள் துறை இன்று வெளியிட்டுள்ளது. மொத்தம் 94.56 சதவிகிதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த நிலையில், மாணவ , மாணவிகளை வாழ்த்தி முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், “பள்ளிக்கல்வியை நிறைவுசெய்து, கல்லூரி வாழ்வுக்குச் செல்லும் மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். உயர்கல்வியில் சிறந்து விளங்கி, தலைசிறந்த பொறுப்புகளில் நீங்கள் மிளிர வேண்டும்.

இம்முறை குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம். அடுத்து காத்திருக்கும் வாய்ப்புகள் உங்கள் முன்னேற்றத்துக்கான துணையாக அமையும் என்ற நம்பிக்கையுடன் முன்னே செல்லுங்கள்.” எனத் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459