மாணவர் சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் உறுதி - ஆசிரியர் மலர்

Latest

07/05/2024

மாணவர் சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் உறுதி

1500x900_2163075-minister

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. பிளஸ்-2 தேர்வில் மாணவ-மாணவிகள் இந்த ஆண்டு 94.56 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டை காட்டிலும் இந்த வருடம் தேர்ச்சி விகிதம் அரை சதவீதம் அதிகமாகும்.


நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவர் சின்னதுரை பிளஸ் 2 பொதுத்தேர்வில் 469 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.


இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது எக்ஸ் தள பதிவில்,


மாணவரை தொடர்புகொண்டு அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்து, 11.08.2023 அன்று நான் உறுதியளித்தபடி அவர் விரும்பும் கல்லூரியில் இணைவதற்கு உதவுவதாகவும், அவரின் உயர் கல்விக்கு அனைத்து வகையிலும் துணை நிற்பேன் என்றும் உறுதிப்படுத்தினேன்.


"கல்வி மட்டுமே சமத்துவம் மலரச் செய்யும் மிகப்பெரிய ஆயுதம் - மு.க" என்று தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459