பொறியியல் உள்ளிட்ட படிப்புகளுக்கு கல்விக் கட்டணம் உயர வாய்ப்பு - ஆசிரியர் மலர்

Latest

09/04/2024

பொறியியல் உள்ளிட்ட படிப்புகளுக்கு கல்விக் கட்டணம் உயர வாய்ப்பு

 பொறியியல், துணை மருத்துவம், கல்வியி யல், சட்டக் கல்லூரி கட்ட ணங்கள் வரும் கல்வியாண் டில் (2024-2025) உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


உயர்கல்வி படிப்புகள் குறிப் பாக, பொறியியல், மருத்துவம், துணை மருத்துவம், கலை மற் றும் அறிவியல், கல்வியியல் ஆகிய படிப்புகளுக்கு கட்ட ணத்தை நிர்ணயிக்க தமிழக அரசு ஒரு குழு அமைத்தது. இந்த குழு வின் தலைவராக ஓய்வுபெற்ற நீதி பதி பொங்கியப்பன் செயல்பட்டு வருகிறார்.


இந்தக் குழு 3 வகையான படிப் புகளுக்கு புதிய கட்டண விகி தத்தை நிர்ணயம் செய்வதற்காக, விண்ணப்பங்களைப் பெற்றுள் ளது.


அதேபோல பி.இ., பி.டெக். ஆகிய பொறியியல் படிப்புகளுக் கும் நர்சிங், பார்மஸி, உள்ளிட்ட 17 வகையான துணை மருத்து வப் படிப்புகளுக்கும் (இளநிலை, முதுநிலை) பி.ஏ., பி.எட். ஆகிய கல்வியியல் படிப்புகளுக்கும் சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகங் களிடமிருந்து, கட்டண உயர்வு குறித்த விண்ணப்பங்கள் பெறப் பட்டுள்ளன.


இதில் பொறியியல் படிப்பு களை நடத்தி வரும் தனியார் கல்லூரிகள் 20 முதல் 25 சதவீத கட்டணத்தை உயர்த்த வேண் டும்என்று கோரிக்கை விடுத்துள்


தனியார் கல்லூரிகளில்பொறி யியல் படிப்புகளுக்கு அரசு ஒதுக் கீட்டு இடங்களுக்கு ரூ.50 ஆயி ரம் எனவும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு கட்டணம் ரூ.85 ஆயிரமாகவும் உள்ளன.

இதேபோன்று தனியார் கல்வி யியல் கல்லூரிகளில் பி.எட்.,எம். எட். இடங்களுக்கு கல்விக் கட்ட ணமாக ரூ.45 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


இதையடுத்து கட்டண விகிதம் மாற்றப்படும் என தெரிகிறது.


புதிய கட்டணம் நிர்ணயம் செய் யப்பட்டு அமலுக்கு வந்தால், அது 3 ஆண்டுகளுக்கு, அதாவது 2026- 2027-ஆம் கல்வி ஆண்டு வரை அமலில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459