பழைய ஓய்வூதிய திட்டம்: தேர்தலுக்கு தேர்தல் அரசு ஊழியர்களை திமுக ஏமாற்றுகிறது- ஈபிஎஸ் - ஆசிரியர் மலர்

Latest

09/04/2024

பழைய ஓய்வூதிய திட்டம்: தேர்தலுக்கு தேர்தல் அரசு ஊழியர்களை திமுக ஏமாற்றுகிறது- ஈபிஎஸ்


மதுரை: “சர்க்கரை என்று சொன்னால் இனிக்காது, வாயில் ஊட்டினால்தான் இனிக்கும் என்பது போல் திமுக பழைய ஒய்வூதிய திட்டத்தை நிறைவேற்றறுவதாக சொன்னால் மட்டும் போதாது, அதை நிறைவேற்றிக்காட்ட வேண்டும். ஆனால், தேர்தலுக்கு தேர்தல் பழைய ஒய்வூதிய திட்டத்தை சொல்லி அரசு ஊழியர்களை திமுக ஏமாற்றுகிறது.” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

இன்று (செவ்வாய்க் கிழமை) அதிகாலை 7.30 மணியளவில் மதுரை மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த காய்கறி மார்க்கெட்டில் மதுரை அதிமுக வேட்பாளர் மருத்துவர் சரவணனை ஆதரித்து, தரைக்கடை வியாபாரிகள்,

TEACHERS NEWS
மாநகராட்சி கடை வியாபாரிகளிடம் நடந்து சென்று ஆதரவு திரட்டினார்.

அப்போது கடந்த சட்டமன்றத் தேர்தலில் பழைய ஒய்வூதிய திட்டம் நிறைவேற்றப்படும் என முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். தேர்தலில் வெற்றி பெற்றதும் மறந்துவிட்டார். இதுவரை பழைய ஒய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை. அதற்கான முயற்சியும் எடுக்கவில்லை.

தற்போது மக்களவைத் தேர்தல் வந்துவிட்டதால் மீண்டும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஒய்வூதிய திட்டம் நிறைவேற்றப்படுவதாக வாக்குறுதி கொடுக்கிறார்கள் . ஆனால், அரசு ஊழியர்கள், அரசை எதிர்த்து தொடர்ந்து போராட்டம் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

‘சர்க்கரை என்று சொன்னால் இனிக்காது, வாயில் ஊட்டினால்தான் இனிக்கும்’ என்பது போல் பழைய ஒய்வூதிய திட்டத்தை கொண்டு வருவதாக சொன்னால் மட்டும் போதாது. அதை நிறைவேற்றிக் காட்ட வேண்டும். தேர்தலுக்கு தேர்தல் இந்த வாக்குறுதியை கூறி அரசு ஊழியர்களை திமுக ஏமாற்றுகிறது.


இதுபோல்தான் அனைத்து தரப்பு மக்களுக்கும் வாக்குறுதி கொடுப்பதும், ஏமாற்றுவதும் திமுகவின் வாடிக்கையாகிவிட்டது என்றார்.

Source: தி இந்து 

1 comment:

  1. அதிமுக விரோதி ஆனால் திமுக பச்சை துரோகி

    ReplyDelete

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459