தேர்தல் பணியில் விபத்து: ஆசிரியை கணவர் பலி ,ஆசிரியை படுகாயம் - ஆசிரியர் மலர்

Latest

19/04/2024

தேர்தல் பணியில் விபத்து: ஆசிரியை கணவர் பலி ,ஆசிரியை படுகாயம்

 


சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜான் பிரகாஷ்( 39), இவரது மனைவி அனிதா (39). இவர் சேலம் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இன்று நடைபெறும் மக்களவைத் தேர்தலுக்காக சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள சந்தனகிரி அரசு தொடக்கப்பள்ளியில் தேர்தல் பணிக்காக அனிதா தனது கணவர் ஜான் பிரகாஷ் உடன் இரு சக்கர வாகனத்தில் அனிதாவின் தாய் வீட்டான ஏத்தாப்பூரில் இருந்து ஆத்தூரை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, தளவாய்பட்டி பிரிவு சாலையின் அருகே நாய் குறுக்கே வந்ததால் நிலைத்திடுமாறி கீழே விழுந்ததில் இருவரும் படுகாயம் அடைந்தனர். அங்கிருந்த பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் பெத்தநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி கணவர் ஜான் பிரகாஷ் பலியானார்.

மேலும், படுகாயம் அடைந்த அனிதாவை சேலம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து, ஜான் பிரகாஷின் உடலை கைப்பற்றிய ஆத்தூர் ஊரக காவல் துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459