மாம்பழத்தில் கெமிக்கல் கலப்படத்தை எளிதில் கண்டறியலாம் - ஆசிரியர் மலர்

Latest

28/04/2024

மாம்பழத்தில் கெமிக்கல் கலப்படத்தை எளிதில் கண்டறியலாம்

 


கோடைக் காலத்தில் சீசன் பழங்கள் எனச் சொல்லப்படக் கூடிய மாம்பழம், தர்பூசணி போன்றவற்றை மக்கள் அதிகம் வாங்கி சாப்பிடுவதுண்டு. இந்த பழங்களின் விற்பனையை அதிகரிக்கவும், பழங்களை விரைவில் பழுக்க வைக்கவும் அதிக ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

மாம்பழங்களைப் பழுக்க வைக்க கால்சியம் கார்பைடு (calcium carbide) ரசாயனத்தைப் பெரும்பாலும் பயன்படுத்துவதாக நிபுணர்கள் கூறியுள்ளனர். ரசாயனங்கள் கலந்த இந்த பழங்களை உண்ணும்போது ஒவ்வாமை, நரம்பு மண்டல பிரச்னை, புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இதனால், ரசாயனங்கள் கலந்த பழங்கள் விற்கபடுகிறதா எனத் அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். அந்தவகையில், சமீபத்தில் கோயம்பேடு மார்க்கெட்டில் ஆய்வு செய்த அதிகாரி ஒருவர், ரசாயனங்கள் கலந்த மாம்பழத்தை மக்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம் எனக் கூறியிருந்தார். 

*நிறம்: “எல்லா மாம்பழங்களும் ஒரே நிறத்தில் பழுத்திருக்கும், அதை வைத்துக் கண்டுபிடிக்கலாம். சில ஆங்காங்கே கறுப்பாக வெந்தது போன்று இருக்கும், அதை வைத்தும் கண்டுபிடிக்கலாம்.  

*வாசனை: ரசாயனங்கள் கலந்த பழங்களில் வாசனையே இருக்காது. அவற்றை நுகர்ந்து பார்த்தாலே தெரியும்.

*சுவை: மாம்பழங்கள் இயற்கையிலேயே சுவை மிகுந்தவை. ஆனால், இதில் மாம்பழத்திற்கான சுவையே இருக்காது. 

*மாம்பழம் நன்றாகப் பழுத்தது போன்று இருக்கும். ஆனால், அதை வெட்டும் போது காயை வெட்டுவது போலக் கரகரவென இருக்கும். இதை வைத்தும் கண்டுபிடிக்கலாம்.  

சிம்பிள் செய்முறை: நீங்கள் வீட்டிற்கு மாம்பழங்களை வாங்கி வந்தால் சிறிது நேரம் அதைத் தண்ணீரில் போடுங்கள். ரசாயன மாம்பழங்கள் மிதக்கும், ராசாயனம் இல்லாத மாம்பழங்கள் நீரில் மூழ்கும்.


இதனை வைத்தும் கண்டுபிடிக்கலாம்.  

அதோடு ஜூஸ் கடையில் ஏற்கனவே வெட்டி வைத்த மாம்பழங்களைப் போட்டுக் கொடுத்தால் குடிக்காதீர்கள். நீங்களே மாம்பழத்தை எடுத்துக் கொடுங்கள் “என அதிகாரி கூறியுள்ளார். 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459