சென்னை, ஏப். 8: வாக்குப் பதிவுக்குப் பிறகும் தேர்தல் நடத்தை விதிகள் தொடரும் என்று தலைமைத் தேர் தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரி வித்தார்.
இதுகுறித்து தலைமைச்செயலகத் தில் செய்தியாளர்களுக்கு திங்கள்கி ழமை அவர் அளித்தபேட்டி:வாக்கா ளர்களுக்கு வாக்குச் சாவடி அடை யாள சீட்டு (பூத் ஸ்லிப்) வழங்கும் பணி கடந்த 1-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. திங்கள்கி ழமை காலை 11 மணி நிலவரப்படி, 2.08 கோடி வாக்காளர்களுக்கு வழங் கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் தேதி அறி விக்கப்பட்டமார்ச் 16-ஆம்தேதியில் இருந்து நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இந்தக் காலகட்டத்தில் வாகனங்களில் தீவிர சோதனை நடத் தப்படுவதுடன், உரிய ஆவணங்கள் இல்லாத ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுவருகிறது.
சரியான ஆவணங்களை சமர்ப் பிப்போரிடம் ரொக்கப் பணம் திரும்ப அளிக்கப்பட்டு வருகிறது. வாக்குப் பதிவு ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற் குப் பிறகும் தேர்தல் நடத்தை விதி கள் அமலில் இருக்கும். அதாவது, ஜூன் 4-ஆம் தேதி வாக்கு எண் ணிக்கை முடிந்து தேர்தல் நடவடிக் கைகள் நிறைவடையும் வரையிலும் விதிகள் நடைமுறையில் இருக்கும் என்றார் அவர்.
இதன்படி, தமிழகத்தில் ஏப்.19- இல் வாக்குப்
பதிவு முடிந்த பிறகும் ஆவணங்கள் இன்றி ரூ.50,000-க்கு மேல் பணம் எடுத்துச் சென்றால் பறிமுதல் நடவடிக்கை தொடரும் என்று தேர்தல் ஆணைய அதிகாரி கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment