பள்ளி பராமரிப்பு தொகை பாக்கி: தலைமை ஆசிரியர்கள் தவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

28/03/2024

பள்ளி பராமரிப்பு தொகை பாக்கி: தலைமை ஆசிரியர்கள் தவிப்பு

Tamil_News_lrg_3587053

அரசு பள்ளிகளின் வருடாந்திர பராமரிப்பு தொகையை, பள்ளிக்கல்வித்துறை இன்னும் வழங்காமல் பாக்கி வைத்துள்ளது. அதனால், தலைமை ஆசிரியர்கள், நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.


தமிழகம் முழுதும், 37,000 அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில், 47 லட்சம் மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.


ஒவ்வொரு கல்வி ஆண்டிலும், பள்ளிகளின் பராமரிப்பு பணி, பள்ளிகளில் தேவைப்படும் எழுதுபொருள்கள் போன்றவற்றின் செலவுக்கு, பள்ளிக் கல்வித் துறையில் இருந்து நிதியுதவி வழங்கப்படும்.


நடப்பு கல்வி ஆண்டில், இன்னும் ஒரு மாதத்தில் அனைத்து தேர்வுகளும் முடிந்து, விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆனால், இந்தஓர் ஆண்டு முழுதும், பள்ளி பராமரிப்பு பணிகளுக்கு செலவிடப்பட்ட நிதியை, பள்ளிக்கல்வித்துறை இன்னும் வழங்கவில்லை.


இதுகுறித்து, தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது:


ஒவ்வொரு ஆண்டும், ஆசிரியர்களும், தலைமை ஆசிரியர்களும் பள்ளியின் அலுவலக வேலைகளுக்கான செலவை, எங்கள் மாத ஊதியத்தில் மேற்கொண்டு, கல்வித்துறை வழங்கியதும், அதை எடுத்து கொள்வோம்.


இந்த ஆண்டு முதல் தவணை தொகை மட்டும் வழங்கப்பட்டுள்ளது.


கடந்த மாதமே, 2ம் தவணை தொகை வழங்க வேண்டிய நிலையில்,


இன்னும் வழங்கவில்லை. இன்னும், மூன்று நாட்களில், நிதியாண்டு முடிய உள்ள நிலையில், நிதியை விரைந்து வழங்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கூறினர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459