திருக்குறள்:
பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : நிலையாமை
குறள்:337
ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல.
விளக்கம்:
ஒரு பொழுதுகூட வாழ்க்கையைப் பற்றி உண்மையைச் சிந்தித்து அறியாதவர்களே, ஆசைக்கோர் அளவின்றி மனக் கோட்டைகள் கட்டுவார்கள்.
Look before you leap
ஆழம் தெரியாமல் காலை விடாதே
இரண்டொழுக்க பண்புகள் :1
1. பெரியோர் , பெற்றோர், ஆசிரியர்களை மதித்து நடப்பேன்.2. அவர்கள் மனம் புண் படும் படி பேசவோ நடந்து கொள்ளவோ மாட்டேன்.
பொன்மொழி :
மகிழ்ச்சியாக இருக்கும்போது நீங்கள் அழகாக இருக்கிறீர்கள். --ஆஸ்கார் வைல்ட்
பொது அறிவு :
1. இந்தியாவில் வைர (diamond) சுரங்கங்கள் எங்குள்ளன?
விடை: பன்னா
2.
பனம் பூ மாலையை அணிந்தவர்கள் யார்?
விடை: சேர அரசர்கள்
English words & meanings :
ஆரோக்ய வாழ்வு :
முருங்கை கீரை :
சத்தில்லாத குழந்தைகள், முருங்கை சூப் தினமும் அருந்தினால் பலம் பெற்று ஆரோக்கியம் பெறுவது உறுதி.TEACHERS NEWS
நீதிக்கதை
செல்வந்தர்க்கு ஒரு நண்பர் இருந்தார். அவர் பேனா வைக்கும் இடத்தை அடிக்கடி மறந்து விடுவார். இதனால் விலை மலிவாக நிறைய பேனா வாங்கி, தொலைத்து விடுவார். இந்த கவனக் குறைவை நினைத்து மிகவும் மனம் வருந்தினார். அப்போது செல்வந்தர் தன் நண்பருக்கு ஒரு ஆலோசனை வழங்கினார். மிகவும் விலை உயர்ந்த பேனா ஒன்று வாங்க சொன்னார். அதன் படியே 22 காரட் தங்கத்தால் ஆன பேனா ஒன்றை வாங்கினார். பிறகு ஆறு மாதம் கழித்து செல்வந்தர் அந்த நண்பரை சந்தித்தார். பேனா மறதியை பற்றி விசாரித்தார். அந்த தங்க பேனாவை தான் மிகவும் கவனமாக வைத்துக் கொள்வதாகவும், முன்பு இருந்ததை விட தன்னுடைய செயல்பாடுகளில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் தெரிவித்தார். இதுதான் நம்முடைய வாழ்க்கையிலும் நடந்து கொண்டிருக்கிறது. நாம் மதிப்பாக உணரும் ஒவ்வொன்றையும் கவனத்துடன் பார்த்துக் கொள்கிறோம்.
இன்றைய செய்திகள்
No comments:
Post a Comment