உயர்கல்வி உதவித்தொகை: விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு வாய்ப்பு - ஆசிரியர் மலர்

Latest

23/01/2024

உயர்கல்வி உதவித்தொகை: விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு வாய்ப்பு

 


1186763

யுஜிசியின் செயலர் மணீஷ் ஆர்.ஜோஷி அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:


ஒவ்வொரு ஆண்டும் மத்திய கல்வி அமைச்சகம், பிரதமரின் உயர்கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவர்கள் உதவித்தொகை பெறுவதற்கு தேசிய உதவித்தொகை இணையதளம் மூலம் விண்ணப்பங்களை பெறுகிறது. இந்நிலையில் நடப்பாண்டு பல தகுதியுடைய மாணவர்கள் தங்களுடைய விண்ணப்பத்தை புதுப்பிக்கவில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.


இதையடுத்து தேசிய உதவித்தொகை தளத்தில் ஆன்லைன் மூலம் உதவித்தொகை புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள், அடுத்த ஆண்டிற்கு விண்ணப்பிப்பதற்காக வழிவகை செய்யப்பட்டு உள்ளது. அதன்படி தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது ஆவணங்களுடன் அமைச்சகத்தை அணுகி, விவரங்களை சரிபார்த்துக் கொண்டால், உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.


உயர்கல்வி நிறுவனங்கள் தகுந்த நடவடிக்கைகளின் மூலம் மாணவர்களிடைம் இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459