தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு(டிட்டோஜாக்) ஆலோசனை கூட்ட அறிக்கை - ஆசிரியர் மலர்

Latest

07/01/2024

தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு(டிட்டோஜாக்) ஆலோசனை கூட்ட அறிக்கை

 தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஆலோசனை கூட்டம்


தமிழ்நாடு  தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு டிட்டோ ஜாக்  கூட்டம் நேற்று 06.01.2023 மருத்துவ துறை சங்கம் இடத்தில்வைத்து நடைபெற்றது.


 இக்கூட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் தோழமை சங்க மாவட்ட நிர்வாகிகள்  ஆகியோர் தலைமை

 டிட்டோ ஜாக் மாவட்ட உயர்மட்டக் குழு உறுப்பினர் வரவேற்புரை ஆற்றினார்.


 டிட்டோ ஜாக்  மாவட்டபொதுக்குழு உறுப்பினர் கலந்து கொண்டு கொண்டனர்


 இக்கூட்டத்தில் டிட்டோ ஜாக் கூட்டமைப்பில் உள்ள அனைத்து சங்க  மாவட்ட பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.


  இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன


01.தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றக்கூடிய 90% ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பை பறிக்கக் கூடிய மாநில முன்னுரிமையை வலியுறுத்தும் அரசாணை 243 உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.


02. 2023 அக்டோபர் 12ஆம் தேதி மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் மதிப்புமிகு பள்ளிக்கல்வி இயக்குனர் மதிப்புமிகு தொடக்கக் கல்வி இயக்குனருடன்  டிட்டோ ஜாக் நடத்திய பேச்சு வார்த்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 12 கோரிக்கைகள் தொடர்பான ஆணையினை உடனடியாக வெளியிட வேண்டும்.


 மேற்கண்ட இரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முதல் கட்டமாக வரும் ஜனவரி 11ஆம் தேதி மாவட்டம்  முழுவதும் அனைத்து வட்டார தலைநகரங்களிலும் மாலை நேர கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.


 அடுத்த கட்டமாக ஜனவரி 27ஆம் தேதி மாவட்ட தலைநகரில் ஒருநாள் உண்ணா நிலை அறப்போராட்டத்தினை நடத்துவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


🔥குறிப்பு:🔥


♦️வட்டாரத்தில் ஏற்படும் செலுவுகளை வட்டார அமைப்பில் உள்ள டிட்டோஜாக் சங்கங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும்


மாவட்ட அளவில் நடைபெறும் செலவினங்களுக்கு ஒவ்வொரு சங்களின் மாவட்ட அமைப்பு சார்பாக 6000 நிதி காப்பாளர் சத்தியசீலன் அவர்களிடம் கொடுக்க வேண்டும்.


♦️ஆர்ப்பாட்ட இடம், வட்டார அளவில் டிட்டோஜாக் பிளக்ஸ் காவல்துறை அனுமதி ஆகியவற்றை வட்டார  கூட்டத்தில் முடிவெடுத்து காலத்தின் அருமை கருதி

TEACHERS NEWS
அனைத்து சங்க நிர்வாகிகளுடன் பிரச்சார பயணம் மேற்கொள்வது குறித்து திட்டமிட வேண்டும் எனவும், அனைத்து வட்டாரங்களிலும் 100% ஆசிரியர்களை ஆர்பாட்டத்தில் பங்கேற்க செய்திட களப்பணியாற்றிட வேண்டும் என்பதையும் கனிவோடு கேட்டுக் கொள்கிறோம்.


ஒன்றுபடுவோம்!

போராடுவோம்!!

வெற்றி பெறுவோம்!!!


டிட்டோஜாக் கூட்டமைப்பு  


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459