மாநில அளவிலான கலை பண்பாட்டுத் திருவிழா ( Kala Utsav 2023-24 ) போட்டிகள் - தேதி & நடைபெறும் இடம் அறிவிப்பு. - ஆசிரியர் மலர்

Latest

 




03/11/2023

மாநில அளவிலான கலை பண்பாட்டுத் திருவிழா ( Kala Utsav 2023-24 ) போட்டிகள் - தேதி & நடைபெறும் இடம் அறிவிப்பு.

 


IMG_20231103_105710_wm

இவ்வாண்டு மாநில அளவிலான கலை பண்பாட்டுத் திருவிழா ( Kala Utsav 2023-24 ) போட்டிகள் 15.11.2023 முதல் 18.11.2023 வரை சேலம் மாவட்டத்தில் நடைபெறவுள்ளது . இதற்கான நிகழ்ச்சி அட்டவணை இத்துடன் இணைப்பு -1 ல் இணைக்கப்பட்டுள்ளது.

 

எனவே , அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் மாவட்ட அளவில் 10 கலை வடிவங்ககளிலும் முதலிடம் பெற்ற மாணவர் மற்றும் மாணவிகள் போட்டிகள் நடைபெறும் நாட்களில் தவறாது கலந்துகொள்ள ஏதுவாக அவர்கள் பயிலும் பள்ளிகளுக்கு உரிய தகவல் அனுப்பிட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் , சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவர்களின் விவரங்களை இத்துடன் இணைப்பு -2 ல் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து உடனடியாக அனுப்பிடவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 இணைப்பு : 1 & 2

Kala Utsav - State Level Competitions 2023-24 | Proceedings - Download here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459