பொறியியல் மாணவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - ஆசிரியர் மலர்

Latest

02/11/2023

பொறியியல் மாணவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

 தமிழக பொறி யியல் துறை மாணவர்களுக்காக ரூ.100 கோடி நிதியில் 'தி டிவிஎஸ் சீமா ஸ்காலர்ஷிப்' எனும் பெய ரில் உதவித் தொகை வழங்கும் திட்டத்தை டிவிஎஸ் நிறுவனம் அறிவித்தது. இது குறித்து அந்நிறுவனம் சார்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு 


டிவிஎஸ் மோட்டார் நிறுவனத் சின் நிறுவனர் ஆசிரியர் னிட்டு 'தி டிவிஎஸ் சீமா ஸ்காலர் ஷிப்' திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இத்திட்டத்துக்காக ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.


இதன்மூலம், ஒவ்வோர் ஆண்டும் பொறியியல் துறையில் தொழில் முறை பட்டப்படிப்புகள் படிக்கும் சுமார் 500 மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும். குறிப்பாக, பொறியியல் துறையில் ரோபோட் டிக்ஸ் மற்றும் இயந்திரவியல் பயி லும் மாணவர்களுக்கு அவர்களின் பாடத் திட்டம் நிறைவடையும் காலம் வரை இந்த உதவித்தொகை

வழங்கப்படும். 'சீமா' என்று அழைக்கப்பட்ட டி.எஸ். ஸ்ரீனிவாசன், பட்டப்ப டிப்பு, கல்வி எதுவுமின்றி தாமா கவே இயந்திரப் பொறியாளராக வெற்றி கண்டவர். எனவே, இந்த உதவித்தொகை திட்டம் அவருக்கு மிகப்பொருத்தமான அஞ்சலியாக இருப்பதுடன், தகுதியான மாண வர்களின் திறமைகளை வளர்த்தெடுத்து மேம்படுத்துவதை நோக்க மாகக் கொண்டிருக்கும்.

ஐஐடி உள்ளிட்ட தரம் வாய்ந்த பொறியியல் வனங்களுடன் மிக நெருக்கமாக டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் இணைந்து செயல்படஉள்ளது.


இதன் மூலம் இந்த உதவித் தொகை அங்கு படிக்கும் திறமை வாய்ந்த மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும்.


இந்த நிதி, தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்காக மட்டுமே செயல்படுத்தப்படுகிறது. தேர்வுக் குழு விதிமுறைகளின்படி நடைபெறும் தேர்வில் தேர்ச்சிபெ றும்மாணவர்கள் மட்டுமே உதவித் தொகை பெறத் தகுதியானவராக தேர்ந்தெடுக்கப்படுவர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



 வேலைவாய்ப்பு செய்திகள் 2023

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459