தமிழகத்தில் 3,312 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு! - ஆசிரியர் மலர்

Latest

04/06/2023

தமிழகத்தில் 3,312 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

 


தமிழகத்தில் நடந்து முடிந்த ஆசிரியர்களுக்கான கலந்தாய்வின் முடிவில் ஏற்பட்டுள்ள 3312 ஆசிரியர்கள் காலியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.


தற்காலிக ஆசிரியர்கள்:


தமிழகத்தில் 2023 – 24 ஆம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஜூன் 7ம் தேதி முதல் தொடங்க உள்ளது. வழக்கமாக கல்வி ஆண்டு தொடங்குவதற்கு முன்னதாகவே அரசு பள்ளிகளுக்கான ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு முழுவதுமாக நடத்தி முடிக்கப்பட்டு புதிதாக உருவாகியுள்ள காலி பணியிடங்களுக்கான ஆசிரியர்களும் நியமனம் செய்யப்படுவார்கள். நடப்பு ஆண்டில் மே மாதம் 8ம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடக்க இருந்த போது கலந்தாய்வானது திட்டமிட்டபடி நடந்து முடிக்காமல் பல்வேறு காரணங்களுக்காக தள்ளி வைக்கப்பட்டது.


தற்போது ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு அனைத்தும் நடத்தி முடிக்கப்பட்டு தொடக்க கல்வித்துறையின் கீழ் 424 நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களும், 1111 தொடக்கப்பள்ளி ஆசிரியர்களும், 1777 இடைநிலை ஆசிரியர்களும் என்று மொத்தமாக 3312 பேர் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் அரசு பள்ளிகளில் மொத்தம் 3312 காலியிடங்கள் ஏற்பட்டுள்ளது. இப்பணியிடங்களில் ஆசிரியர்களை தற்காலிக முறையில் தொகுப்பூதிய அடிப்படையில் பணி நியமனம் செய்து கொள்ள பள்ளி கல்வித்துறையானது அறிவுறுத்தியுள்ளது

TEACHERS NEWS

1 comment:

  1. விடியாத அரசு தற்காலிக ஆசிரியர் கொண்டே பள்ளிகளை இயக்க முடிவு செய்து விட்டது போல.

    ReplyDelete

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459