அரசு ஓய்வூதியர்களுக்கு MUSTERING குறித்த தகவல்!!! - ஆசிரியர் மலர்

Latest

16/05/2023

அரசு ஓய்வூதியர்களுக்கு MUSTERING குறித்த தகவல்!!!

 தமிழக அரசு ஒய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் தாங்கள் உயிருடன் இருப்பதை 2023ம் வருடம் கருவூலத்திற்குச் சென்று பதிவு செய்வது குறித்த விவரம்:


தமிழக அரசு ஆணை எண் 134 நிதித் (ஓய்வூதியம்) துறை நாள் 26.5.2021 இன் படி 2023 ஆம் வருடம் ஜூலை, ஆகஸ்டு செப்டம்பர் மாதங்களில் ஓய்வூதியம் பெறும் கருவூலத்திற்கு நேரில் சென்று நீங்கள் உயிருடன் இருப்பதை பதிவு செய்ய வேண்டும்.


Join Telegram


அவ்வாறு பதிவு செய்யாதவர்களுக்கு நவம்பர் 2023 ஆம் மாத ஓய்வூதியம் நிறுத்தி வைக்கப்பட்டு எப்பொழுது மஸ்டரிங் செய்கிறீர்களோ அப்பொழுது அந்த மாத ஓய்வூதியத்துடன் நிலுவை ஓய்வூதியத்தையும்சேர்த்துப் பெறலாம்.


2) தபால்காரர் மூலமும் விரல் ரேகையை பதிவு செய்து மஸ்டரிங்

செய்து கொள்ளலாம்.


3) வாழ்நாள் சான்றிதழ் படிவத்தில் பாஸ்போர்ட்

 சைஸ் கலர்  போட்டோ

 ஒட்டி அரசு மருத்துவர் 

அல்லது தமிழ் நாடு/

மத்திய அரசில் பணி

செய்யும் அரசிதழ் 

பதிவு பெற்ற 

அலுவலர் சான்று 

பெற்று விண்ணப்ப

கடிதத்துடன் 

பதிவு அஞ்சல் 

ஒப்புதல் அட்டையுடன் 

கூடிய தபாலில் 

அனுப்பலாம்.


   சாதாரண தபாலில்

   அனுப்பக் கூடாது.

-----------------------------------

வெளிநாடு, 

வெளி மாநிலங்களில்

இருக்கும் ஓய்வூதியர்கள்

அங்குள்ள நோட்டரி பப்ளிக், நீதிபதி, அரசு உயர் அதிகாரிகள்,

இந்திய வெளிநாட்டு

தூதுவர் அலுவலகங்களில்

இருக்கும் சான்று வழங்கும் அதிகாரம்

பெற்றவர்களிடம்

மேற்கண்டவாறு 

வாழ்நாள் சான்று பெற்று

ஓய்வூதியம் பெறும்

கருவூலத்திற்கு அனுப்ப

வேண்டும்.

------------------------------


கருவூலத்திற்கு நேரில் செல்லும் பொழுது கொண்டு செல்ல வேண்டிய ஆவணங்கள்


1.அசல் பென்ஷன் புத்தகம்

2. அசல் வங்கி பாஸ் 

புத்தகம்

3. அசல் ஆதார் மற்றும்

பான் கார்டு

*****************

வெளிநாடு, 

வெளிமாநிலங்களில்

இருப்பவர்கள் விண்ணப்ப கடிதத்துடன்

இணைக்கப்பட வேண்டிய

ஆவணங்கள்:

மேற்கண்ட ஆவணங்களின் ஜெராக்ஸ் நகலை மட்டுமே இணைத்து அனுப்ப வேண்டும்.

அசல் ஆவணங்களை இணைத்து அனுப்பக்கூடாது.


மஸ்டரிங்/ உயிர் வாழ்வதை பதிவு செய்தல்/ 

நேர் காணல் என்று கூறுவது அனைத்தும்

ஒன்றுதான்!

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459