CBSE - பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு : அதிகபட்சமாக திருவனந்தபுரத்தில் 99.91% பேர் தேர்ச்சி!! - ஆசிரியர் மலர்

Latest

 




 


12/05/2023

CBSE - பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு : அதிகபட்சமாக திருவனந்தபுரத்தில் 99.91% பேர் தேர்ச்சி!!


IMG_20230512_142747

LINK : Click here to view the Results

நாடு முழுவதும் சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. மாணவ, மாணிவிகள் தங்களதுJoin Telegram


 தேர்வு முடிவுகளை results.cbse.nic.in அல்லது parikshasangam.cbse.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம். நாடு முழுவதும் பிப்.,15 முதல் ஏப்., 5 வரை சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு நடந்தது. இந்த தேர்வினை 16.9 லட்சம் மாணவர்கள் 6,759 மையங்களில் எழுதினர். இந்த நிலையில், சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 87.33% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 5.38% குறைந்துள்ளது.

அதே சமயம் இது கொரோனாவுக்கு முந்தைய 2019ம் ஆண்டு தேர்ச்சி விகிதமான 83.40ஐ விட அதிகம் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக திருவனந்தபுரம் மண்டலத்தில் 99.91%, பெங்களூருவில் 98.64%, சென்னை மண்டலத்தில் 97.40% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவில் யார் முதலிடம், 2ம் இடம், 3ம் இடம் என்பதை சிபிஎஸ்இ அறிவிக்கவில்லை. மாணவர்களிடம் தேவையற்ற போட்டியையும் மன அழுத்தத்தையும் தவிர்க்க யார் முதலிடம், 2ம் இடம்,3ம் இடம் விவரத்தை வெளியிடவில்லை.சிபிஎஸ்சி பிளஸ் 2 தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் 6.01% அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.


The post சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு : அதிகபட்சமாக திருவனந்தபுரத்தில் 99.91% பேர் தேர்ச்சி

 வேலைவாய்ப்பு செய்திகள் 2023

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459