முதுகலை ஆசிரியர்கள் வெளி மாவட்டக் கலந்தாய்வு தாமதமாக நடைபெறுவது ஏன்? இயக்குநர் விளக்கம்! - ஆசிரியர் மலர்

Latest

Join Telegram

23/05/2023

முதுகலை ஆசிரியர்கள் வெளி மாவட்டக் கலந்தாய்வு தாமதமாக நடைபெறுவது ஏன்? இயக்குநர் விளக்கம்!

 முதுகலை ஆசிரியர்கள் வெளி மாவட்டக் கலந்தாய்வில் நாளை முதல் ஒவ்வொரு பாடத்திற்கும் 100 பேர் மட்டுமே கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கான அட்டவணை வெளியிடப்படும்.

முதுகலை ஆசிரியர்கள் வெளி மாவட்ட பொது மாறுதல் கலந்தாய்வு தாமதம் சார்ந்து மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரக (இணை இயக்குநர்) மேல்நிலைக்கல்வி அவர்களுடன் சற்று முன் பேசிய செய்தி குறிப்பு.


முதுகலை ஆசிரியர்கள் வெளி மாவட்ட கலந்தாய்வு தொடர்ந்து நான்கு நாட்களாக நடைபெற்று வருகிறது.

 குறிப்பாக எமிஸ் சர்வர் சில நேரம் தாமதமாகவும் சில நேரம் இயங்காமலும் நின்று விடுவது பற்றியும் முதுகலை ஆசிரியர்கள் இது சார்ந்து பெரிதும் மன உளைச்சல் அடைந்து வருவதையும் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய நமது பள்ளிக்கல்வி இணை இயக்குநர் மேல்நிலைக் கல்வி அவர்களிடம் சற்று முன் தெரிவித்தேன்.


 இது சார்ந்து பதில் அளித்த மதிப்பிற்குரிய தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநர் மேல்நிலை கல்வி அவர்கள் நடப்பு ஆண்டில் பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள ஓராண்டு ஒரு பள்ளியில் பணிபுரிந்து இருக்க வேண்டும் என்ற விதி நீக்கப்பட்டதால் கிட்டத்தட்ட 7000 முதுகலை ஆசிரியர்கள் பணி மாறுதலுக்கு வெளி மாவட்ட செல்வதற்கு விண்ணப்பித்து உள்ளார்கள். இவற்றில் இன்னும் ஒரு வருடம் கூட ஆகாத முதுகலை ஆசிரியர்கள் 3000 க்கு மேல் உள்ளனர் .


எப்படி அனைத்து முதுகலை ஆசிரியர்களும் பலன் பெற வேண்டும் என்று நீங்கள் எல்லாம் கொடுத்த கோரிக்கையினை ஏற்று தான் இந்த வெளி மாவட்டக் கலந்தாய்வை அனைத்து முதுகலை ஆசிரியர்களும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்ற எண்ணத்தில் நடத்தி வருகிறோம்.


 அதே நேரத்தில் எமிஸ் சர்வர் மூலமாக தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகள் என அனைத்து விதமான கலந்தாய்வுகள் நடைபெற்று வருகின்றன.


 இதில் தமிழகத்தில் உள்ள 38 மாவட்டத்திலும் ஏதாவது ஒரு மாவட்டத்தில் ஒரு ஆசிரியருக்கு பணிமூப்பு விடுபட்டு இருந்தால் பிழை இருந்தால் அது சார்ந்து அந்த மாவட்டத்தில் இருந்து முதன்மை கல்வி அலுவலர் மாவட்ட கல்வி அலுவலரோ தகவல் தெரிவிக்கும்போது அதனை சரி செய்வதற்கு நிறுத்த வேண்டி இருக்கிறது.


 தொடர்ந்து அதிகமான வேலைகளை எமிஸ் சர்வருக்கு கொடுக்கும்போது சில சமயம் நின்று விடுகிறது.


 எனவே அதனை அவ்வப்போது சரி செய்து  வெளி மாவட்ட கலந்தாய்வு நடத்தி வருகிறோம்


தொடர்ந்து முதுகலை ஆசிரியர்கள் வெளிமாவட்ட கலந்தாய்வு தாமதமாவதை கருத்தில் கொண்டு

 *நாளை முதல் ஒவ்வொரு பாடத்திற்கும் நூறு நூறு ஆசிரியர்கள் மட்டும் முதுகலை ஆசிரியர்கள் வெளி மாவட்ட கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கான அட்டவணை தயாரிக்கப்பட்டு வருகிறது அது உடனடியாக அனுப்பி வைக்கப்படும்.


அதன் அடிப்படையில் நாளை முதல் முதுகலை ஆசிரியர்கள் வெளி மாவட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ள கலந்தாய்வு நடைபெறும் இடத்திற்கு வந்தால் போதும் என்ற தகவலை தெரிவிக்க உள்ளோம் என்று கூறினார் .


அதே நேரத்தில் ஆசிரியர்கள் தங்களுக்குரிய சுழற்சிமுறை வரும்போது உடனடியாக தங்களது சொந்த மாவட்டத்தில் காலி பணியிடம் இல்லாத போது அருகருகே உள்ள மாவட்டங்கள் எந்த பள்ளிக்கு செல்வது என தொடர்ந்து அதிக நேரம் அவர்கள் அது சார்ந்து விசாரிப்பதற்கும் உரிய இடத்தை தேர்ந்தெடுப்பதற்கும் அதிக நேரத்தை சிலர் எடுத்து 

 காலம் தாழ்த்தி வருகின்றனர்.

அதனாலும்  காலதாமதம் ஏற்படுகிறது.


அவர்கள் விரும்பிய மாவட்டம் இல்லாது வேறு புது மாவட்டங்களுக்கு செல்லும்போது அது சார்ந்து விசாரிப்பது எடுப்பதில் உள்ள தாமதத்தை முதுகலை ஆசிரியர்கள் அவ்வாறு செய்யாமல் மிக மிக விரைவாக அவர்கள் தங்களுக்குரிய வெளி மாவட்ட கலந்தாய்வு எடுப்பதற்கு முன்கூட்டியே திட்டமிட்டு காலி பணியிடத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.


 எனவே பள்ளிக் கல்வித்துறையை பொறுத்த அளவில் முதுகலை ஆசிரியர்களுக்கான வெளி மாவட்ட கலந்தாய்வை அனைத்து ஆசிரியர்களும் பயன் பெறும் வகையில் தான் தொடர்ந்து நடத்தி வருகிறோம்.அதனை ஆசிரியர்கள் புரிந்து புரிந்து கொள்ள வேண்டும் 

என்று கூறினார்


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459