அடிக்கும் அனல் காற்று..வீசும் வெப்ப அலையில் இருந்து தப்பிக்க இதை மறக்காமல் செய்யுங்க! - ஆசிரியர் மலர்

Latest

15/04/2023

அடிக்கும் அனல் காற்று..வீசும் வெப்ப அலையில் இருந்து தப்பிக்க இதை மறக்காமல் செய்யுங்க!

சென்னை: இந்தியாவின் பல மாநிலங்களில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அளவு வெப்பம் அதிகரிக்கும் என்றும் பல மாநிலங்களில் வெப்ப அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகி வருகிறது. பல ஊர்களில் அனல் காற்று வீசுகிறது. வெப்ப அலைகளில் இருந்து தப்பிக்க என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மத்திய பிரதேசத்தின் சில பகுதிகள், குஜராத்,

 ALL GOVT ORDERS  & PROCEEDINGS

மகாராஷ்ட்ராவின் உள் மாவட்டங்கள், ஒடிசா, தெலுங்கானாவில் அதிகபட்ச வெப்பம் 40 முதல் 42 டிகிரி செல்சியஸாக உள்ளது. இதர மாநிலங்களில் 40 டிகிரிக்கும் குறைவாக உள்ளது. ஜம்மு காஷ்மீர், வட கிழக்கு மாநிலங்கள் மற்றும் கிழக்கு இந்திய பகுதிகளில் வழக்கத்தை விட 2 முதல் 3 டிகிரி கூடுதல் வெப்பம் பதிவாகியுள்ளது. ஒடிசாவில் வெப்பநிலை அதிகரித்து வருவதால், ஏப்ரல் 16 வரை ஆங்கன்வாடிகள், தனியார் மற்றும் அரசு பள்ளிகளில், பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மழையை கூட எப்படியாவது சமாளித்து விடலாம் ஆனால் தகிக்கும் கோடை காலத்தை சமாளிப்பது கடினம். வெப்ப அலையானது உடலியல் ரீதியாக பல்வேறு பாதிப்புகளை வெப்ப அலை ஏற்படுத்துகிறது. சமவெளிப் பகுதியில், குறைந்தது இரண்டு நாட்களுக்கு 40° செல்சியஸ் அல்லது அதற்கு மேலாகவும், மலைப் பிரதேசங்களில் 30° செல்சியஸ் அல்லது அதற்கு மேலாகவும், கடலோரப் பகுதிகளில் 37° செல்சியஸ் அல்லது அதற்கு மேலாகவும் வெப்பநிலை உயரும்போது வெப்பஅலை நிகழ்வு ஏற்பட்டதாகக் கருதப்படும்.   

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459