நெட்' தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்புகளை, தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது.
பல்கலை, கல்லுாரி உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித் தொகை பெறவும், 'நெட்' தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
தேசிய தேர்வுகள் முகமை சார்பில், ஆண்டுக்கு இரு முறை 'நெட்' தேர்வு நடத்தப்படும். அதன்படி, பிப்., 21ல் துவங்கிய தேர்வு, மார்ச் 12ல் முடிந்தது. எட்டு லட்சத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் எழுதினர்.
இந்நிலையில், நெட் தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு விபரங்களை, தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. ugcnet.nta.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதில் ஏதேனும் ஆட்சேபனை இருப்பின், உரிய சான்றுகளுடன், இன்று இரவு 8:00 மணிக்குள், 200 ரூபாய் கட்டணம் செலுத்தி, இணையவழியில் பதிவு செய்ய வேண்டும். சான்றுகள் சேர்க்கப்படாத முறையீடுகள், பரிசீலனைக்கு ஏற்கப்படாது.
இந்த விவகாரத்தில் வல்லுனர்களின் முடிவே இறுதியானது. இது குறித்த கூடுதல் விபரங்களை, www.nta.ac.in எனும் வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment