FLASH NEWS: பாண்டிச்சேரி: புதிய வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பதன் எதிரொலியாக 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கு நாளை முதல் 26 ஆம் தேதி வரை 11நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை - ஆசிரியர் மலர்

Latest

 




15/03/2023

FLASH NEWS: பாண்டிச்சேரி: புதிய வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பதன் எதிரொலியாக 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கு நாளை முதல் 26 ஆம் தேதி வரை 11நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை

 


NEWS: பாண்டிச்சேரி: புதிய வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பதன் எதிரொலியாக 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கு நாளை முதல் 26 ஆம் தேதி வரை 11நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை

புதுச்சேரியில் 1-8ம் வகுப்புக்கு வைரஸ் காய்ச்சல் காரணமாக வரும் 16ம் தேதி முதல் 26ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வைரஸ் காய்ச்சல் பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். குழந்தைகளின் சுவாசம் மூலமாக ஒருவரிடம் இருந்து தொற்று மற்றொருவரிடம் பரவுகிறது. குறிப்பாக பள்ளிகளில் அதிகளவு பரவுகிறது. பாதிக்கப்பட்ட குழந்தைகள் வீட்டில் இருந்தபடியே முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சுத்தம் செய்வதன் மூலம் இந்த வைரஸ் காய்ச்சலை தடுக்க முடியும்.


இந்நிலையில், புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசிய கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது; புதுச்சேரியில் அதிகளவில் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இதன் காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள்  மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை முதல் 26-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த உத்தரவிற்கான அரசாணை அனைத்து பள்ளிகளுக்கும், பள்ளி கல்வித்துறை மூலமாக அனுப்பிவைக்கப்படும் என தெரிவித்தார்.


-- *புதுச்சேரி கல்வி அமைச்சர் நமசிவாயம் சட்டபேரவையில் அறிவிப்பு.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459