பிளஸ் 2 பொதுத்தேர்வில் தமிழ் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மறு வாய்ப்பு வழங்க நடவடிக்கை : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி - ஆசிரியர் மலர்

Latest

Join Telegram

15/03/2023

பிளஸ் 2 பொதுத்தேர்வில் தமிழ் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மறு வாய்ப்பு வழங்க நடவடிக்கை : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி

 


சென்னை: நேற்று பிளஸ் 2 பொதுத்தேர்வில் தமிழ் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மறு வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உதயநிதி பேட்டி அளித்துள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2022-23-ஆம் ஆண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. இந்த தேர்வு ஏப்ரல் 2-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பிளஸ்-2 தேர்வை மொத்தம் 8 லட்சத்து 36 ஆயிரத்து 593 பேர் எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 4 லட்சத்து 3 ஆயிரத்து 156 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 33 ஆயிரத்து 436 பேர் மாணவியர். மூன்றாம் பாலினத்தவர் ஒருவர்.


அதேபோல புதுச்சேரியில் மொத்தம் 14 ஆயிரத்து 710 மாணவ-மாணவியர் பங்கேற்றனர்.  அவர்களில் 6 ஆயிரத்து 982 மாணவர்கள், 7 ஆயிரத்து 728 மாணவியர். மேலும், தனித் தேர்வர்கள் 23 ஆயிரத்து 747 பேர், மாற்றுத்  திறனாளிகள் 5,206 பேர், சிறைவாசிகள் 90 பேர் தேர்வு எழுதினர். இவர்களுக்காக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 3,225 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. அதில் தமிழ்நாட்டில் 3,185, புதுச்சேரியில் 40, தனித் தேர்வர்களுக்கு 134, சிறைகளில் 8 பொதுத் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது.

மேலும், தேர்வுகளை கண்காணிக்க 3,100 பறக்கும் படை அமைக்கப்பட்டு, அதில் 1,135 பேர் நியமிக்கப்பட்டனர். இதில், பள்ளி தேர்வர்கள் 49,559 பேரும், தனி தேர்வர்கள் 1,115 பேரும் தேர்வு எழுதவில்லை என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது; நேற்று பிளஸ் 2 பொதுத்தேர்வில் தமிழ் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மறு வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக கல்வி அமைச்சரிடம் பேசி மீண்டும் தேர்வெழுத வாய்ப்பளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

 வேலைவாய்ப்பு செய்திகள் 2023

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459