நேரடி பணி நியமன வழக்கு : நீதிமன்றம் அதிரடி உத்தரவு - ஆசிரியர் மலர்

Latest

27/01/2023

நேரடி பணி நியமன வழக்கு : நீதிமன்றம் அதிரடி உத்தரவு

2016-ஆம் ஆண்டு தூய்மைப் பணியாளராக நியமிக்கப்பட்ட  ஈஸ்வரி என்பவர், கோவை மாநகராட்சியில்  கருணை அடிப்படையில் சென்னை  உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.  அவரது மனுவில்,  கோவை மாநராட்சியில் 69 இளநிலை உதவியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இப்பணிக்கு 654 பேர் விண்ணப்பித்த நிலையில், 440 பேர் நேர்முகத்தேர்வுக்கும், சான்றிதழ் சரிபார்ப்புக்கும் அழைக்கப்பட்டு, 54 பேர் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டனர்.

உரிய தகுதி இருந்தும், முறையாக விளம்பரங்கள் செய்யப்படாததால், தன்னால் இளநிலை உதவியாளர் பணிக்கான தேர்வு நடைமுறைகளில் கலந்து கொள்ள முடியவில்லை என்றும், உரிய விதிகளையும், இடஒதுக்கீட்டு நடைமுறையையும் பின்பற்றாமல் 54 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின் போது,  யாருக்கும் சலுகை இல்லை, தேர்வு நடைமுறை இடஒதுக்கீட்டு நடைமுறையே பின்பற்றியே நியமனங்கள் நடைபெற்றதாகவும்   கோவை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, தூய்மை பணியாளராக நியமனமான மனுதாரர், இளநிலை பொறியாளர் தேர்வு நடைமுறையில் பங்கேற்காத நிலையில் வழக்கு தொடர முடியாது என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.  நேரடி பணி நியமணத்தின்போது  ஊழல் இல்லாத அளவுக்கு வெளிப்படைத்தன்மையை பின்பற்ற வேண்டும் என்றும் நீதிபதி அறிவுறுத்தினார்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459