புயல் மற்றும் கனமழையால் பல்வேறு கல்லூரி, பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு - ஆசிரியர் மலர்

Latest

09/12/2022

புயல் மற்றும் கனமழையால் பல்வேறு கல்லூரி, பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு

 


🪁வங்க கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் புயல் இன்று  நள்ளிரவு கரையை கடக்க உள்ளது. இதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தலைமை செயலாளர் இறையன்பு தலைமையில் புயல் முன்னெச்சரிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் புயலை எதிர்கொள்ள அனைத்து துறையினரும் தயார் நிலையில் இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.


🪁தமிழ்நாட்டில் மாண்டஸ் புயல் மற்றும் கனமழை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 28 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்துள்ளனர். பல்வேறு பல்கலைகழகத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.


🪁சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் வெளியிடப்படும் என அண்ணாமலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.🪁மாண்டஸ் புயல் காரணமாக இன்று நடைபெருந்த பாலிடெக்னிக் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர். டிசம்பர் 16-ம் தேதி பாலிடெக்னிக் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும்  என்று தொழிநுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.🪁இன்று மற்றும் நாளை (10.12.2022) நடைபெறவிருந்த  வேலூர், திருவள்ளூர் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புயல் கனமழை எச்சரிக்கை காரணமாக திருவள்ளுர் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.🪁இந்நிலையில் மாண்டஸ் புயல் காரணமாக இன்று நடைபெறவிருந்த அண்ணா பல்கலைகழக தேர்வுகள் அனைத்தும் தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் மற்றொரு தேதியில் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் நடத்தப்படும் என அண்ணா பல்கலைகழகம் அறிவித்துள்ளது.🪁புயல் எதிரொலியால் 10-ம் தேதி நடைபெறுவதாக இருந்த தமிழ்நாடு ஊரகத் திறனாய்வு தேர்வு 17-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 


🪁புயல், கனமழை எச்சரிக்கை காரணமாக TRUST  தேர்வு அரசு தேர்வுகள் இயக்ககம் ஒத்திவைத்துள்ளது.🪁இன்று நடைபெறவிருந்த 5 ஆண்டு சட்டப் படிப்பு மற்றும் மூன்றாண்டு சட்டப் படிப்பு பாடங்களுக்கான செமஸ்டர் தேர்வுகளை ஒத்திவைத்து அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. செமஸ்டர் தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளனர்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459