இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விளக்கம் - ஆசிரியர் மலர்

Latest

28/12/2022

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விளக்கம்



 இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்: அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்


இடைநிலை ஆசிரியரின் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திட்டவட்டம்


ஊதியம் தொடர்பான இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் அரசின் நிதி நிலையுடன் தொடர்புடையது என்றும் விளக்கம்.....
IMG-20221228-WA0410
*🅱️இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் – அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி* 


📚திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று சுவாமி தரிசனம் செய்தார். 

👉பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஊதியம் தொடர்பான இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை அரசின் நிதி நிலையுடன் தொடர்புடையது. 

👉இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை திமுகவின் தேர்தல் அறிக்கையில் உள்ளது.

👉தேர்தல் அறிக்கைகளை திமுக அரசு படிப்படியாக நிறைவேற்றி வருகிறது. அதுபோல் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையும் விரைவில் நிறைவேற்றப்படும்.

👉கொரோனா பரவல் தொடர்பாக தமிழக அரசும் சுகாதாரத்துறையும் கொடுக்கும் அறிவுறுத்தலின்படி பள்ளிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்க பள்ளிக்கல்வித்துறை தயாராக உள்ளது. 

👉வரும் கல்வியாண்டில், பாடத்திட்டங்களில் திருக்குறள் அதிகமாக இடம்பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459