ஜேஇஇ தேர்வு முறைகேடு: ரஷ்ய ஹேக்கர் கைது - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

04/10/2022

ஜேஇஇ தேர்வு முறைகேடு: ரஷ்ய ஹேக்கர் கைது

 புதுடெல்லி: ஜேஇஇ தேர்வு முறைகேடு தொடர்பாக ரஷ்யாவில் இருந்து வந்த ஹேக்கரை சிபிஐ விசாரணக்காக அழைத்து சென்றுள்ளது. ஒன்றிய தொழில்கல்வி நிறுவனங்களில் உள்ள படிப்புகளுக்கான ஜேஇஇ நுழைவுத்தேர்வு ஒன்றிய அரசால் நடத்தப்பட்டு வருகிறது. கடந்தாண்டு நடந்த இத்தேர்வில் பங்கேற்ற மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு நடத்துவதாகவும், முன்னணி தேசிய தொழில்நுட்ப நிறுவனங்களில் சேர்க்கை உறுதி செய்வதாகவும் கூறி பெரும் தொகையை பெற்று கொண்டு, மெகா முறைகேடு செய்தததாக அபினிட்டி எஜுகேஷன் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் மற்றும் பலர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த முறைகேட்டில் ரஷ்ய நாட்டை சேர்ந்த ஒருவர் முக்கிய ஹேக்கராக செயல்பட்டது தெரிந்தது. அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் அனைத்து விமான நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டு இருந்தது. இந்நிலையில், ரஷ்யாவில் இருந்து டெல்லி வந்த அவரை சிபிஐ போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். விசாரணைக்கு பின் அவர், கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment