காலை உணவு திட்டம்: முதல்வர் ஆய்வு - ஆசிரியர் மலர்

Latest

 




 


26/09/2022

காலை உணவு திட்டம்: முதல்வர் ஆய்வு

 872503

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை கடந்த செப்.15ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரையில் தொடங்கி வைத்தார்.


இத்திட்டத்தின் செயல்பாடு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, திட்டத்தின் செயல்பாடு குறித்து, ஊரக வளர்ச்சித் துறை செயலர் அமுதாவிளக்கினார்.


இதைத் தொடர்ந்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சி மாதிரி தொடக்கப் பள்ளியில் காலை உணவு வழங்கும் பொறுப்பாளர் மணிமேகலையிடம் தொலைபேசி வாயிலாக முதல்வர் பேசினார். அப்போது ‘எத்தனை பேர் பள்ளியில் சாப்பிட்டனர், உணவு நேரத்துக்கு வந்ததா, மாணவர்கள் சாப்பிட்டு முடித்துவிட்டார்களா, ஏதேனும் புகார் இருக்கிறதா' என்றுமுதல்வர் கேட்டார். தொடர்ந்து,பள்ளியின் தலைமையாசிரியை சுமதியிடம் பேசிய முதல்வர், தினமும் 36 பேர் சாப்பிடுகிறார்களா? உணவு தரம் நன்றாகஇருக்கிறதா? என்று கேட்டார். அவர்கள் உரிய பதிலளிக்க அவற்றை குறித்துக் கொண்டார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459