தலைமை ஆசிரியர்களுக்கு செப்.7 முதல் திறன் மேம்பாட்டு பயிற்சி - ஆசிரியர் மலர்

Latest

Join Telegram

04/09/2022

தலைமை ஆசிரியர்களுக்கு செப்.7 முதல் திறன் மேம்பாட்டு பயிற்சி

 860013

பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரியும் இணை இயக்குநர்கள், முதன்மை, மாவட்ட, வட்டாரக் கல்வி அதிகாரிகள், மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் என சுமார் 12,000 பேருக்கு பணித்திறன் மேம்பாடு, தலைமை திறன், மேலாண்மை தொடர்பாக ஆண்டுதோறும் உள்ளுறை பயிற்சி (Residential Training) அளிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது.


அதன்படி, இந்த கல்வி ஆண்டின் இறுதிக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தலைமைப் பண்பு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது.


இதையடுத்து, முதன்மை கருத்தாளர்களுக்கான பயிற்சி முகாம் ஆகஸ்ட் 22 முதல் 27-ம் தேதி வரை விருதுநகரில் நடத்தப்பட்டது. தொடர்ந்து, தலைமை ஆசிரியர்களுக்கு செப்டம்பர் 7 முதல் 28-ம் தேதி வரை சென்னையில் நேரடி பயிற்சி அளிக்கப்பட உள்ளது.


இதில் பங்கேற்க வேண்டிய தலைமை ஆசிரியர் விவரங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இப்பட்டியலில் உள்ளவர்களை பணியில் இருந்து விடுவித்து, பயிற்சியில் தவறாமல் பங்கேற்குமாறு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (தொழிற்கல்வி) வெ.ஜெயக்குமார் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459