Weather Report : தமிழ்நாட்டில் இந்த 2 மாவட்டங்களில் மழை பிச்சு எடுக்கும்.. எங்கெங்கு தெரியுமா? - ஆசிரியர் மலர்

Latest

04/09/2022

Weather Report : தமிழ்நாட்டில் இந்த 2 மாவட்டங்களில் மழை பிச்சு எடுக்கும்.. எங்கெங்கு தெரியுமா?

 தமிழ்நாட்டில் இன்று 2 மாவட்டங்களில் மட்டும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது. முக்கியமாக சென்னையில் பல்வேறு இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்தது.சென்னை, உள் தமிழ்நாடு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, கனமழை பெய்து வந்தது. முக்கியமாக சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் கனமழை பெய்து வந்தது.


மழை


அதேபோல் கர்நாடகாவிலும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தீவிர மழை பெய்தது. இதன் காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. நேற்று நிலவரப்படி மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு மழை காரணமாக அதிகரித்தது. கடைமடை வரை காவிரியில் நீர் வரத்து ஏற்பட்டுள்ளது. அதேபோல் பாலாறு உள்ளிட்ட தமிழ்நாட்டின் மற்ற ஆறுகளிலும் மழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது.


காவிரி


இந்த நிலையில்தான் இன்று தமிழ்நாட்டில் 2 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. லேசானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பு. இதனால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று இந்திய வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த இரண்டு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்தது.


 இன்று வானிலை


பெங்களூரில் கனமழையால் கடந்த வாரம் வெள்ளம் ஏற்பட்டது. கர்நாடகாவில் பல்வேறு சாலைகள் இந்த வெள்ளம் காரணமாக கடுமையாக நீரில் மூழ்கின. அப்போது கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்தது. இந்த நிலையில்தான் இன்று து கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் காவிரியில் மேலும் நீர் வரத்து அதிகம் ஆக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.


எச்சரிக்கை


தமிழ்நாட்டில் மற்ற பகுதிகளுக்கு மழை எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. இன்று வறண்ட வானிலையே காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையிலும் இன்று வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஆனால் மழை பெய்ய வாய்ப்பு இல்லை. கடலில் காற்று குறைவாக இருக்கும் என்பதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459