தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற தேவையில்லை இடைநிலை ஆசிரியருக்கு ஊதிய உயர்வை வழங்க வேண்டும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு! - ஆசிரியர் மலர்

Latest

04/09/2022

தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற தேவையில்லை இடைநிலை ஆசிரியருக்கு ஊதிய உயர்வை வழங்க வேண்டும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு!

IMG_20220904_105314

தூத்துக்குடி மாவட்டம் குருவிகுளத்தை சேர்ந்த அந்தோ ணிசாமி , மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் , சிதம்பராபுரம் ஆர்.சி. பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றுகிறேன் . பல ஆண்டு ஊதிய உயர்வு உள்ளிட்ட எந்த பலன்களும் வழங்கப்படவில்லை . இவற்றை வழங் கும்படி மாவட்ட கல்வி நிர்வாகத்திற்கு மனு அனுப்பி னேன் . எனது கோரிக்கையை சங்கரன்கோவில் மாவட்ட கல்வி அலுவலர் நிராகரித்தார் . 

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்ற காரணத்தை காட்டி , உரிய பலன்களை மறுத்துள்ளனர் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய உயர்வுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற அவசியம் இல்லை என சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது . 

அதன் படி கல்வி அதிகாரிகளின் உத்தரவை ரத்து செய்து , எனக் கான ஆண்டு ஊதிய உயர்வு உள்ளிட்ட பலன்களை வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார் . இந்த மனுவை நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் விசாரித்தார் . 

முடிவில் , மனுதாரருக்கு ஊதிய உயர்வு உள்ளிட்ட பலன்களை வழங்க மறுத்த மாவட்ட கல்வி அதிகாரியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது . 

மனுதாரருக்கு கடந்த 2012 - ம் ஆண்டில் இருந்து உரிய பலன்களை வழங்குவது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் 8 வாரத்தில் உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தர விட்டார்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459