ஆசிரியர் சங்கம் அக்.28ல் ஆர்ப்பாட்டம் - ஆசிரியர் மலர்

Latest

Join Telegram

18/09/2022

ஆசிரியர் சங்கம் அக்.28ல் ஆர்ப்பாட்டம்

 பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அக்., 28ம் தேதி, மாநில அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது,'' என, தலைமை ஆசிரியர் சங்க மாநில தலைவர் அன்பரசன் தெரிவித்தார்.

தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டையில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற மாநில தலைவர் அன்பரசன், கூறியதாவது:

 மாணவர்களின் நலன் கருதி, தமிழக அரசு, பள்ளி கல்வித்துறை மூலமாக, நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அறிவிக்க வேண்டும்.

பள்ளி கல்வித்துறையில் நிலவி வரும் பல்வேறு குளறுபடிகளை கண்டித்தும், பள்ளி கல்வித்துறை இயக்குனர் மற்றும் அமைச்சர் முரண்பட்ட கருத்துக்களை கூறி வருவதை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், அக்., 28ம் தேதி, சென்னையில், மாநில அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

மாணவர்களை அன்பாக நடத்த வேண்டும் என்பது தான், எங்களுடைய நிலைப்பாடு. சில பகுதிகளில், ஆசிரியர்கள் மீது பல்வேறு புகார்கள் பெறப்பட்டு, போலீஸ் நடவடிக்கை எடுத்து வருகிறது.குற்றச்சாட்டுகள் மீது தகுந்த ஆதாரங்கள் இருந்தால், நடவடிக்கை எடுக்க வேண்டும். சில இடங்களில் வேண்டுமென்றே பொய்யான குற்றச்சாட்டுகளை ஆசிரியர்கள் மீது வைக்கின்றனர். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459